மகளிர் உரிமை தொகையை வச்சே.. பல மடங்கு லாபம் பார்க்க முடியும்.. இப்படி ஒரு விஷயம் இருக்கு தெரியுமா?
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 பணத்தின் மூலம் நீங்கள் உங்களின் வருமானத்தை உயர்த்த முடியும். ஆம் இந்த பணத்தை நீங்கள் சரியாக முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெற முடியும். அதை எப்படி பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.
முக்கியமாக.. குறிப்பிட்ட வங்கியில் சேமித்தால் அதற்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. அதாவது இந்த தொகைக்கு என்று கூடுதலாக வட்டி கொடுக்கும் நிறைய திட்டங்கள் உள்ளன.

பொதுவாக வங்கியில் பணம் சேமிக்க 3-4 சதவிகிதம் மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 7.5 சதவிகிதம் வரை வட்டி பெறலாம். 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் பணம் சேர்க்க முடியும். தமிழ்நாடு அரசு இதற்காக மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் கூட்டுறவு வங்கி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
நீலகிரியில் தொடங்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இதில் இணைந்தால் மகளிர் உரிமைத்தொகை பணத்திற்கு மட்டும் 7.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். சாதாரணமாக வழங்கப்படும் 3-4 சதவிகிதம் வட்டிக்கு பதிலாக இந்த கூடுதல் வட்டி இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் அளிக்கும் நீலகிரி கூட்டுறவு வங்கி வழங்குகிறது.
மகளிர் உரிமை தொகை:
புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இனி புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தால்.. அந்த விண்ணப்பங்களை ஏற்க முடியுமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பே பதில் அளித்திருந்தார். யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம்.
எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றுகூறப்படுகிறது .
வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்.
மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications