நீங்க வீடு கட்ட போறீங்களா? புது மின் இணைப்பு வேணுமா? தமிழக மின்வாரியம் தந்த அடுத்த அதிரடியை பாருங்க
சென்னை: புதிதாக மின் இணைப்பு பெறுபவர்கள் பலர் காத்திருக்க, தமிழக மின்வாரியம் முக்கிய அறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது..
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பினை, மாநில அரசு தன்னுடைய வசமே வைத்திருக்கிறது.. இதற்காகவே, தமிழ்நாடு மின்சார வாரியம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.. இந்த அமைப்பின் கீழ் 2 விதமான துணை அமைப்புகள் உள்ளன.

ஒன்று, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) மற்றொன்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) ஆகும்.
மாற்றங்கள்: கரண்ட் கனெக்ஷன் புதிதாக வேண்டுமானால், அதற்கான வசதிகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்து வருகின்றன.. வழக்கமாக, புதிய இணைப்பை பெற வேண்டுமானால், கஸ்டமர்களுக்கு கால அளவு 30 நாட்களாக இருந்தது.. பிறகு, விஷயத்தில் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முடிவு செய்து, சில மாற்றங்களும், திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன.
அதன்படி, மின் இணைப்பு பெற வேண்டுமானால், மின் வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதை பிரிவு அலுவலகத்தினர் பரிசீலித்து இணைப்பு வழங்குவார்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை: வழக்கமாக, புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட வேண்டுமானால் 30 நாட்களும், கரண்ட் கம்பம் நிறுவுவதற்கு 60 நாட்களும், டிரான்ஸ்பார்மர் நிறுவுவதற்கு 90 நாட்களும் கால அவகாசம் உள்ளது. ஆனால் குறித்த காலத்தில் இணைப்பு வழங்கப்படுவதில்லை என்ற அதிருப்தி கிளம்பி உள்ளது.
தற்போது மட்டுமே, புதிய மின் இணைப்பு கேட்டு மாநிலம் முழுதும் உள்ள அலுவலகங்களில் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக சொல்கிறார்கள். விரைவில் பருவமழை காலம் துவங்குவதால் அதற்குள் புதிய இணைப்புகளை வழங்க வேண்டும என்றும் கோரிக்கை வலுவாகி உள்ளது. இந்த கோரிக்கையை தமிழக அரசு விரைந்து பரிசீலிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த உத்தரவை மின்துறை வெளியிட்டுள்ளது.. அதாவது, வீடு உள்ளிட்ட கட்டுமானத்திற்கு புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பித்த, 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 7 நாட்களாக குறைத்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆணையம் உத்தரவு: அதுமட்டுமல்ல, மீட்டர் பொருத்தப்படாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பையும் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் மின்சார வழங்கல் விதிகளில் பல்வேறு திருத்தங்களை செய்தும், ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications