மகளிர் உரிமைத் தொகை ரூ 2500! ஆக.15-ல் விஜய் மாஸ் அறிவிப்பு? "இந்த" 2 விஷயங்களை செய்தால்தான் பணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு சில அப்டேட்டுகளை செய்ய வேண்டும் என்கிறார்கள். அவை என்ன, அவற்றை எளிதில் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அடித்தட்டு, நடுத்தர குடும்பத்தினருக்கு பேருதவியாக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முக்கிய அம்சமாகவும் இருந்தது.

Magalir Urimai Thogai

இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு திமுக வாக்குறுதியில் உரிமைத் தொகை ரூ 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. அதிமுகவோ ரூ 2000 என்றும் தவெக ரூ 2500 வழங்கப்படும் என சொன்னது.

இந்த நிலையில் தவெக ஆட்சி அமைத்ததும் ரூ 2500 உரிமைத் தொகை ஏற்றி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களும் தலா ரூ 1000 மட்டுமே வரவு வைக்கப்பட்டது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி கொடுக்கும் ஆலோசனையில் முதல்வர் விஜய் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத்தினத்தன்று விஜய் முதல்முறையாக மூவர்ணக் கொடியை கோட்டை கொத்தளத்தில் ஏற்றி வைக்கவுள்ளார். அப்போது அவர் சில அறிவிப்புகளை வெளியிடும் போது மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பும் இருக்கும் என சொல்லப்படுகிறது.

அவ்வாறு அறிவித்தால் அந்த ரூ 2500 ஐ பெற பொதுமக்கள் இரு விஷயங்களை செய்ய வேண்டும் என்கிறார்கள். அது என்னென்ன என்பதை பார்க்கலாம். அதாவது உங்கள் வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டு அது செயல்படும் நிலையில் இருத்தல் வேண்டும்.

அரசு வழங்கும் நேரடி பணப்பரிமாற்றம் அனைத்தும் ஆதார் அடிப்படையிலேயே அனுப்பப்படுவதால் இதுவே மிக முக்கியமான படிநிலையாகும். நீண்ட நாட்களாகப் பரிவர்த்தனை செய்யப்படாத வங்கிக் கணக்குள் முடக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே உங்கள் வங்கியின் மொபைல் ஆப் அல்லது நெட் பேங்கில் மூலம் 2 நிமிடங்களில் e-KYC விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வரும் எஸ்எம்எஸ், ஓடிபி ஆகியவற்றை சரிபார்க்க உங்கள் கையில் உள்ள மொபைல் எண்ணுடன் ஆதார் இணைத்திருக்க வேண்டும்.

வங்கிக்கு நேரடியாக செல்லாமல் உங்கள் மொபைல் போன் மூலமாகவே வங்கிக் கணக்கின் e-KYC மற்றும் ஆதார் இணைப்பு குறித்த விஷயத்தை சரி பார்க்கலாம்.

அதாவது உங்கள் வங்கி மொபைல் செயலியில் profiles அல்லது services பகுதிக்குச் செல்லவும். அதில் KYC Status அல்லது Aadhar Seeding status என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது உங்கள் விவரங்கள் சரியாக இருந்தால் Updated என இருக்கும். ஒருவேளை நிலுவையில் இருந்தால் ஓடிபி மூலம் 2 நிமிடங்களில் புதுப்பிக்கலாம். எனவே இந்த அப்டேட் இருப்பது அவசியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+