நீங்கள் 18 வயதானவரா? முதல் முறை வாக்காளரா? வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வர இதோ வழிகள்!
சென்னை: நீங்கள் 18 வயதை கடந்தவர் என்றால் வாக்காளர் அடையாள அட்டையை வீட்டுக்கே வரவழைக்கலாமே! இது தெரியுமா உங்களுக்கு!
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 18 வயதை கடந்தவர்கள் எப்படி வாக்களிப்பது என்பது குறித்தும் வாக்காளர் அடையாள அட்டையை வீட்டுக்கே வரவழைப்பது குறித்து அஜய்குமார் பெரியசாமி என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் எந்த தேர்தலுக்கு உதவும் என்பதால் வாக்காளர் அடையாள அட்டையை வீட்டுக்கே வரவழைப்பது எப்படி என்பதை பார்க்கலாம். இதுகுறித்து அஜய்குமார் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன் (Voters Helpline)என்ற ஒரு செயலி இருக்கும்.
இதை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். இந்த செயலியில் போனால் Voter registration என்ற ஒன்று இருக்கும். அதற்குள் New Voter Registration என்ற ஒரு விண்ணப்பம் இருக்கும். இதில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதையடுத்து நீங்கள் கொடுத்த விவரங்களை சரிபார்த்தவுடன் வாக்காளர் அடையாள அட்டை உங்கள் வீட்டுக்கே வந்து சேரும். இவ்வாறு அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை பெற்றால்தான் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியும்.
ஆனால் வாக்களிக்க உங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்தாலே போதும், அரசு குறிப்பிட்ட பான் கார்டு, ஆதார் கார்டு, அரசு ஊழியர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வைத்து வாக்களிக்கலாம். அது போல் ஆன்லைனிலும் வாக்காளர் அடையாள அட்டையை பெற வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பெற, உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://voters.eci.gov.in க்குச் செல்ல வேண்டும். இப்போது நீங்கள் ஒரு ஐடியை உருவாக்கி உங்கள் தொலைபேசி எண் மற்றும் அதில் அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல் (OTP) உதவியுடன் உள்நுழைய வேண்டும்.
இப்போது மேல் இடதுபுறத்தில் தெரியும் 'புதிய வாக்காளராகப் பதிவு செய்யுங்கள் - படிவம் 6' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். முன் தெரியும் படிவத்தில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, புகைப்படத்தை பதிவேற்றிய பின், வீட்டில் உள்ள யாராவது ஒரு உறுப்பினரின் வாக்காளர் அட்டை எண்ணையும் உள்ளிடவும். முகவரி சான்றாக ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக, அனைத்து தகவல்களையும் சரியாக சரிபார்த்த பிறகு, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
இதைத் தொடர்ந்து நீங்கள் ஒரு விண்ணப்ப ஐடியை பெறுவீர்கள். அதன் உதவியுடன் விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸை நீங்கள் சரிபார்க்க முடியும். விண்ணப்பித்து சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு, இந்த இணையதளத்தில் விண்ணப்ப ஐடியின் உதவியுடன் அதன் ஸ்டேட்டஸை சரிபார்த்து, கார்டு தயாரிக்கப்பட்டிருந்தால், அதையும் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் வாக்காளர் அடையாள அட்டையும் சில நாட்களில் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும். தற்போதுள்ள வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்வதற்கான விருப்பமும் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது . மேல் வலதுபுறத்தில் கொடுக்கப்பட்டுள்ள விருப்பத்தின் உதவியுடன், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்த இணையதளத்தை அணுகலாம்.
வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்ய விரும்பினால் வாக்காளர் அட்டையின் EPIC எண்ணை டவுன்லோடு செய்யலாம். வாக்காளர் அட்டையை டவுண்லோடு செய்வதற்கு முதலில் தேர்தல் ஆணையத்தின் https://voterportal.eci.gov.in or https://old.eci.gov.in/e-epic/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்குச் செல்ல வேண்டும். இந்த போர்டலில் ஒரு அக்கவுன்ட்டை உருவாக்க வேண்டும். அதை வைத்து லாகின் செய்து அடுத்தடுத்த உள்ளீடுகளை கொடுத்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம்












Click it and Unblock the Notifications