வருமான வரி கட்டுபவரா? அப்ப இந்த ஆப்ஷனை நோட் பண்ணிக்குங்க.. ஆன்லைனில் இப்படி ஒரு வசதியா? அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரியை ஆன்லைனில் எப்படி செலுத்துவது தெரியுமா? போன்-பே மூலம் எப்படி செலுத்த வேண்டும் தெரியுமா?

வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.. தனிநபர்கள் அனைவருமே வருமான வரி செலுத்த வேண்டும்.

Do you know How to pay Income Tax through Online and Income Tax department Major facilities

தனிநபர்கள் மட்டுமல்லாமல், இந்து கூட்டு குடும்பங்கள், தனிநபர் சங்கங்கள், நிறுவனங்கள், LLP உள்ளிட்டோர் வருமான வரி செலுத்த வேண்டும்..

வருமான வரி: நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால், அவசரத்துக்கு வங்கிகளில் கடன் கேட்க நேரிட்டால் கிடைக்காமல் போய்விடும். அப்படியே நீங்கள் கடன் கேட்டாலும், வருமான வரி தாக்கல் செய்துவிட்டு வருமாறு சொல்வார்கள். அதேபோல, ஒரு குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் சொத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது அதற்குரிய source உங்களால் காண்பிக்க முடியாமல் போய்விடும்.

வழிமுறைகள்: அதேபோல, நீங்கள் ஏதாவது ஒரு தொழில் செய்யும்போது, உங்கள் PAN number க்கு யாராவது TDS கட்டி இருந்தால் அதனை Refund வாங்க முடியாது. அதனால்தான், வருமானவரியை முறையாக கட்ட சொல்லி அரசு அறிவுறுத்துகிறது. இதற்கு பரிசுகளையும் தந்து ஊக்குவிக்கிறது. ஆன்லைனில் வரி செலுத்த கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளலாம்:

- https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வெப்சைட்டில், இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள "e-pay Tax" பட்டனை கிளிக் செய்யவும்.

- இப்போது புதிய பக்கம் திறக்கப்படும்.. இந்த வெப்பேஜில் எந்த வருடத்துக்கு நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டுமோ? நீங்கள் செலுத்த போகும் பேமெண்டின் வகை அதாவது அட்வான்ஸ் டேக்ஸ் செல்ஃப் அசெஸ்மென்ட் டேக்ஸ் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். இந்த விவரங்களை நிரப்பிய பிறகு "Continue" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

- பிறகு, ஸ்கிரீனில் உள்ள பக்கத்தில், வருமான வரி தொகை, கூடுதல் கட்டணம் (ஏதேனும் இருந்தால்), மேல் வரி (ஏதேனும் இருந்தால்) போன்ற விவரங்களை பிழையில்லாமல் நிரப்ப வேண்டும்.

- பிறகு, பேமெண்ட் செலுத்த வேண்டும். பேமெண்ட் செலுத்துவதற்கு உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் இருக்கின்றன.. ஆன்லைன் (டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், RTGS/NEFT) மற்றும் ஆஃப்லைன் (பேங்க் சலான் மற்றும் RTGS/NEFT).

ஆஃப்லைன் : பெரிய அளவிலான தொகையை வருமான வரியாக செலுத்துபவர்கள் பெரும்பாலும் ஆஃப்லைன் பேமெண்ட் முறையைத்தான். தேர்ந்தெடுப்பார்கள். இதற்கும் 2 விதமான ஆப்ஷன்கள் உள்ளன.. பேங்க் சலான் மற்றும் RTGS/NEFT.

போன்பே: ஒருவேளை, இணைய பக்கத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தால், டிஜிட்டல் கட்டண முறையான Phonepay மூலமாக எளிதில் வருமான வரி செலுத்தி கொள்ளலாம்.. இதற்காகவே, உள்ளதுதுதான் PhonePe என்ற வசதி.. இதன்மூலம் எப்படி வரிகளை செலுத்த வேண்டும் தெரியுமா? இதோ அதற்கான வழிமுறைகள்:
- இந்த புதிய ஆப் PhonePe பக்கத்திற்கு செல்ல வேண்டும்.. அங்கே "வருமான வரி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- பிறகு, நீங்கள் செலுத்த விரும்பும் வரி வகை என்ன? மதிப்பீட்டு வருடம் என்ன? பான் கார்டு விவரங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்

- இப்போது, வரித்தொகையை பதிவிட்டு, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.

- பணம் செலுத்திய பிறகு, அந்த தொகை 2 வேலை நாட்களுக்குள் வரி போர்ட்டலில் வரவு வைக்கப்படும். - இந்த புதிய ஆப் PhonePe பக்கத்திற்கு செல்ல வேண்டும்.. அங்கே "வருமான வரி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- பிறகு, நீங்கள் செலுத்த விரும்பும் வரி வகை என்ன? மதிப்பீட்டு வருடம் என்ன? பான் கார்டு விவரங்கள்? என்ன போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்

- இப்போது, வரித்தொகையை பதிவிட்டு, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.

- பணம் செலுத்திய பிறகு, அந்த தொகை 2 வேலை நாட்களுக்குள் வரி போர்ட்டலில் வரவு வைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+