கூகுள் மேப் லொகேஷன் ஷேரிங்.. மறந்தும்கூட இந்த தப்பை செய்துடாதீங்க.. இல்லாட்டி ரூ.5 ஆயிரம் அபராதமாம்
சென்னை: கூகுள் மேப் லொகேஷனை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் ஷேர் செய்வது எப்படி தெரியுமா?
சமீப காலமாகவே கூகுள் மேப்-களின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாத சேவையாகிவிட்டது.. இதற்கு காரணம், எந்த பொதுப்போக்குவரத்தில் நாம் பயணம் செய்தாலும், நாம் செல்லவேண்டிய இலக்குக்கான வழியை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிய உதவுகிறது இந்த கூகுள் மேப்.

பயன்கள்: இதனால், நாம் செல்லும் வழியை பற்றி அறிந்து கொள்வதோடு, போகும் வழியில் இருக்கும் வாகன நெரிசல் பற்றியும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.. அத்துடன் சரியான நேரத்தில் வேறு பாதையை தேர்ந்தெடுத்து, வாகன நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல், செல்லவே நமக்கு இந்த கூகுள் மேப் உதவுகிறது.
அதுமட்டுமல்ல, தனிநபர்களின் நடமாட்டத்தையும் இந்த கூகுள் மேப் மூலம் அறியலாம்.. ஆனால், தனிநபர் ஒருவரை அவரது அனுமதியின்றி இப்படி டிராக் செய்வது சட்டவிரோதமாகும்.. எனவே, நமக்கு நெருக்கமானவர்கள், உறவினர்களை வேண்டுமானால் அவர்களின் அனுமதியுடன் டிராக் செய்யலாமே தவிர, பிறரை டிராக் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
மெசேஜ்கள்: அதேபோல, ஒருவரது லைவ் லொக்கேஷனை, வாட்ஸ் அப் மூலமாக ஷேர் செய்யலாம். ஆண்ட்ராய்டு போன் மூலம் லொகேஷன் ஷேர் செய்வது எப்படி தெரியுமா? முதலில், கூகுள் மேப்ஸ் செயலிக்குள் நுழைந்து, "profile picture" என்று டைப் செய்ய வேண்டும்.. பிறகு Location Sharing என்பதையும், Add People என்பதை டைப் செய்ய வேண்டும்.
இப்போது, Sharing Time, Contact என்ற ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.. குறிப்பிட்ட நபரிடம் கூகுள் அக்கவுண்ட் இல்லையானால், Add People என்ற மெனுவில் Location Sharing Link என்பதை பயன்படுத்த வேண்டியிருக்கும்... இந்த லிங்கை காப்பி செய்து, மெசேஜிங் ஆப் அல்லது மெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்.
ஐபோன்கள்: ஐபோன் பயன்படுத்துவராக இருந்தால், லொகேஷன் ஷேர் செய்வது எப்படி தெரியுமா? Google Contact List-ல் அவர்களது G Mail முகவரியை இணைக்க வேண்டும். பிறகு, உங்கள் டிவைஸில் கூகுள் மேப் செயலிக்குள் நுழைந்து, உங்கள் Profile Picture மீது டைப் செய்ய வேண்டும். இப்போது Location Sharing என்பதை கிளிக் செய்து, Add people, Time Duration போன்றவற்றையும் தீர்மானித்துக் கொள்ளலாம்.. இறுதியில், காண்டாக்ட்ஸ்களை கூகுள் மேப்புடன் ஷேர் செய்ய பர்மிஷன் தந்தால் போதும்.
அதேபோல, உங்களது காரில் டாஷ் போர்டில் மொபைல் ஹோல்டரை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. ஹோல்டரில் வைக்காமல், கையிலேயே போனை வைத்துக்கொண்டு Google Map-ஐப் பார்த்தால், அது வாகன விதிச் சட்டத்தின் மீறலாக கருதப்படுகிறது. இதற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் கட்டவேண்டியிருக்கும்.
அபராதம்: இப்படி காரில் மொபைல் ஹோல்டர் வைப்பதற்காக, பைக்குகளுக்கு 200 ரூபாய் வரையும் காருக்கு 1000 ரூபாய் வரையும் செலவாகும்.. இதை பொருத்தி விட்டாலே, 5000 ரூபாய் அபராதம் செலுத்த தேவையில்லை.
ஒரு நிலம் அல்லது வீடு யாருடையது என்பதையும் கூகுள் மேப் மூலம் அறிய முடியும். இடத்தின் விவரத்தை அறிய வேண்டுமோ அந்த இடத்திற்குச் சென்று மொபைலில் கூகுள் மேப் செயலியைத் திறந்து சாட்டிலைட் வியூ ஆப்ஷனை தேர்வு செய்து அறியலாம்.. இதற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற தமிழக அரசின் இணையதளத்தை பயன்படுத்தி அறிந்து கொள்ள வேண்டும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications