Beela Venkatesan: "பீலா ராஜேஷ் இல்லை.. இனி பீலா வெங்கடேசன் தான்!" 2 வருடத்திற்கு முன்புதான் பெயரை கூட மாற்றி இருந்தார்
சென்னை: கொரோனா காலத்தில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்து பம்பரமாகச் சுற்றி வேலை செய்தவர் பீலா வெங்கடேசன். இவர் உடல்நலக்குறைவால் இன்று மாலை காலமானார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது பெயரை பீலா ராஜேஷ் என்பதில் இருந்து பீலா வெங்கடேசன் என்று மாற்றி இருந்தது நினைவுகூரத்தக்கது.
தமிழ்நாட்டில் 2020ல் கொரோனா பரவ ஆரம்பித்தபோது பிரஸ் மீட் நடத்தி கொரோனா குறித்து தொடர்ச்சியான விளக்கங்களைக் கொடுத்து வந்தவர் பீலா வெங்கடேசன். கொரோனா தொடக்கக் காலத்தில் மிகப் பெரிய பீதி இருந்த வந்த நிலையில், இவரது பிரஸ் மீட்கள் தான் மக்களுக்குத் தெளிவையும் நம்பிக்கையையும் கொடுத்தது.

சுகாதாரத் துறைக்குப் பிறகு வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளர் உட்படப் பல்வேறு பொறுப்புகளில் பீலா வெங்கடேசன் வேலை செய்து வந்தார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பிரைன் டியூமர் எனப்படும் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதற்காக அவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரு மாதங்களாகவே தீவிரச் சிகிச்சை பெற்று வந்த போதிலும், இவரது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இந்தச் சூழலில்தான் இவர் இன்று மாலை சிறுதாவூர் அருகே உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்,
பீலா வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது பெயரை மாற்றி இருந்தார். அதவது ஐஏஎஸ் அதிகாரியான பீலா, ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் என்பவரைக் காதலித்து 1992ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து பீலா தனது பெயரை பீலா ராஜேஷ் என்று மாற்றி இருந்தார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்தச் சூழலில் தான் கடந்த அதிமுக ஆட்சியில் காவல் அதிகாரியான ரஜேஸ் தாஸ் சில சர்ச்சைகளில் சிக்கினார். இதைத் தொடர்ந்து பீலா தனது கணவர் ராஜேஷ் தாஸிடம் இருந்து பிரிந்து வாழ ஆரம்பித்தார். மேலும், விவகாரத்து கோரியும் வழக்கு தொடர்ந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த 2023 டிசம்பர் மாதம் பீலா தனது பெயரை மீண்டும் மாற்றினார். தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாகத் தந்தை பெயரான வெங்கடேசன் என்பதைப் பெயருக்குப் பின் மாற்றினார். அதேபோல ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பீலா என்று பெயரை மாற்றி இருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications