தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 11 விஐபி வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது தெரியுமா?
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் திமுக 21+ 1 (கொமதேக), காங்கிரஸ் 9 இடங்களிலும் சிபிஐ 2 இடங்களிலும் மார்க்சிஸ்ட் இரு இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரு இடங்களிலும் மதிமுக ஒரு இடத்திலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் போட்டியிடுகிறது.
அது போல் அதிமுக கூட்டணியில் அதிமுக 33 இடங்களிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகமும் தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. அது போல் பாஜக கூட்டணியில் பாஜக 19 + 4 (தமமுக, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தேவநாத யாதவின் கட்சி ஆகியவை தாமரை சின்னத்தில் போட்டி), பாமக 10 இடங்களிலும் தமாகா 3 இடங்களிலும் அமமுக இரு இடங்களிலும் சுயேச்சை ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் 39 தொகுதிகளில் 11 தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக அறியப்படுகின்றன. அவை தென்சென்னை, சிதம்பரம், வேலூர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, தருமபுரி, தென்காசி, நீலகிரி ஆகிய 11 தொகுதிகள் ஆகும்.
தென் சென்னை: தென் சென்னையில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுக சார்பில் ஜெயவர்தனும் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் நாதக சார்பில் தமிழ்ச் செல்வியும் போட்டியிட்டனர். 2019-ல் தமிழச்சி தங்கப்பாண்டியன் ( திமுக) 5,64,872; ஜெயவர்த்தன்(அதிமுக) 3,02,649; ரங்கராஜன் (மக்கள் நீதி மய்யம்)1,35,465; ஷெரின் (நாம் தமிழர் கட்சி) 50,222 வாக்குகளைப் பெற்றனர். இந்த முறை இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 67.82%.
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் திமுக சார்பில் விசிக தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக சார்பில் சந்திரஹாசன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, நாதக சார்பில் ஜான்சி ராணி ஆகியோர் போட்டியிட்டனர். 2019-ல் அண்ணா திமுகவின் சந்திரசேகர்(அதிமுக) 4,97,010; இளவரசன் (அமமுக) 62,308 வாக்குகள் பெற்றிருந்தனர். இந்த முறை இந்த தொகுதியில் பெற்ற வாக்குகள் 74.87%
தருமபுரி: தருமபுரி தொகுதியில் பாஜக சார்பில் பாமகவின் சவுமியா அன்புமணி, திமுக சார்பில் அபிநயா பொன்னிவளவன், அதிமுக சார்பில் அசோகன், திமுக சார்பில் மணி ஆகியோர் போட்டியிட்டனர். 2019-ல் திமுகவின் செந்தில்குமார் (திமுக) 5,74,988 வாக்குகளைப் பெற்று வென்றார். அத்தேர்தலிலும் பாமகவின் அன்புமணி 5,04,235 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த 2024 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 75.44%
வேலூர்: வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் பசுபதி, பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம், நாதக சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏசி சண்முகமும் கதிர் ஆனந்தும் மோதினர். கதிர் ஆனந்த் (திமுக) 4,85,340 ; ஏசி சண்முகம் ( அதிமுக) 4,77,199 வாக்குகளைப் பெற்றனர். இந்த 2024 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 73.04%
கோவை: கோவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், நாதக சார்பில் கலாமணி ஜெகன்னாதன் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 2019-ல் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் நடராஜன் 5,71,150 வாக்குகளையும் சிபி ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளைப் பெற்றிருந்தனர். இந்த 2024 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 71.17%
நீலகிரி: நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன், நாம் தமிழர் ஜெயகுமார், பாஜக சார்பில் எல் முருகன் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு திமுகவின் ஆ. ராசா 5,47,832 வாக்குகளையும் அதிமுக சார்பில் எம். தியாகராஜன் 3,42,009 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இந்த 2024 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 71.07%
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கில் நவாஸ் கனி, நாம் தமிழர் கட்சி சந்திரபிரபா, அஇஅதிமுக சார்பில் ஜெயபெருமாள், சுயேச்சையாக ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய யூனியன் கட்சியின் நவாஸ் கனி 4,69,943 வாக்குகளையும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3,42,821 வாக்குகளையும் பெற்றனர். இந்த 2024 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 71.05%
தேனி: தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்ச் செல்வன், அமமுக சார்பில் டிடிவி தினகரன், அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி மதன் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுகவின் ரவீந்திரநாத் 5,04,813 வாக்குகளையும் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் 4,28,120 வாக்குகளையும் பெற்றனர். இந்த 2024 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 71.74%
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணியும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன், நாம் தமிழர் சார்பில் ரவீனா ருத் ஜனே ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் கனிமொழி 5,63,143 வாக்குகளையும் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகளையும் பெற்றனர். இந்த 2024 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 70.93%
தென்காசி: தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார், அஇஅதிமுக சார்பில் கிருஷ்ணசாமி, பாஜக சார்பில் ஜான் பாண்டியன், நாதக சார்பில் இசை மதிவாணன் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் தனுஷ் எம் குமார் 4,76,156 வாக்குகளையும் அதிமுக சார்பில் கிருஷ்ணசாமி 3,55,389 வாக்குகளையும் பெற்றனர். இந்த 2024 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 71.06%
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், அஇஅதிமுக சார்பில் பசிலியான் நசரத், நாம் தமிழர் சார்பில் மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸின் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளையும் பொன் ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளையும் பெற்றனர். இந்த 2024 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 70.15%












Click it and Unblock the Notifications