சின்ன வெங்காயம்.. இப்படி உதைப்படுதே? கிலோ விலை பாருங்க.. சென்னை கோயம்பேட்டில் தக்காளி படுத்தும் பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன வெங்காயத்தின் விலையும், தக்காளியின் விலையும் இல்லத்தரசிகளின் கவனத்தை பெற்று வருகிறது.. இன்றைய காய்கறி நிலவரங்களை பாருங்கள்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரையில், 90 சதவீதம் சின்ன வெங்காயம், 10 சதவீதம் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது... இதில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

எப்போதுமே பெரிய வெங்காயத்தின் விலை குறைவாகவும், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்தும் காணப்படுவது வழக்கமாகும்.. ஆனால், கடந்த சில நாட்களாகவே, சின்ன வெங்காயம் விலை குறைந்து காணப்படுகிறது..

chennai Koyambedu Small Onion Tomato

சின்ன வெங்காயம்: கிலோ ரூ.180 வரையெல்லாம் விற்கப்படும் சின்ன வெங்காயம், இப்போது வரத்து அதிகாரிப்பால், கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கும் வரத்து அதிகரித்துள்ளதால், விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு சாம்பார் வெங்காயத்தின் விலை குறைந்தே இருக்கும் என்று வியாபாரிகளும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால், தக்காளி விலையோ அதிகமாக உயர்ந்துவிட்டது. கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தக்காளி வந்து சேர்கின்றன.. அதேபோல, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் தக்காளி வருகின்றன.. இன்றும் கூட 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி உட்பட காய்கறிகள் வந்திறங்கின.

தக்காளி விலை: இதில், பரவலாக பெய்து வரும் மழை மற்றும் வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தக்காளிக்கு மட்டும் கடும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறதாம்.. வெளிமாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகிறார்கள்.. ஆனால், கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்தபடியே உள்ளது.

மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படுகிறது.. இதுவே வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு பீன்ஸ் விலை குறைந்துள்ளது.. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

காய்கறிகள் விலை: அதேபோல, முருங்கைக்காய் ரூ.60, கேரட் ரூ.55, தக்காளி ரூ.52, அவரைக்காய் ரூ.45, பீன்ஸ், பாகற்காய் தலா ரூ.40, கத்தரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு தலா ரூ.25, வெண்டைக்காய், புடலங்காய், பீட்ரூட், நூக்கல் தலா ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.18 என விற்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+