Dhanush: தனுஷுக்கு ரஜினிகாந்த் கொடுத்த சூப்பர் கிஃப்ட்.. நெகிழ வைத்த சம்பவம்!
சென்னை: நடிகர் தனுஷுக்கு ரஜினிகாந்த் அண்மையில் ஒரு பரிசு கொடுத்தாராம். அது குறித்துதான் தற்போது அனைவரும் பேசி வருகிறார்கள்.
கடந்த இரு தினங்களாக ரஜினி ரசிகர்களும் சரி, தனுஷ் ரசிகர்களும் சரி மிகவும் கவலையுடன் இருக்கிறார்கள். இதற்கு காரணம் தனுஷும் ஐஸ்வர்யாவும் வெளியிட்ட அந்த அறிக்கைதான்.
கடந்த 18 ஆண்டுகளாக கணவன், மனைவியாக அன்னியோன்யமாக வாழ்ந்து வந்த நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்போது பிரிவதாக அறிவித்துள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

ரசிகர்கள்
ரஜினி ரசிகர்களும் சரி, தனுஷ் ரசிகர்களும் சரி, இவர்கள் பிரிவதற்கு வருந்துகிறார்களே தவிர, ஏன் எதற்கு என்பதை போன்ற காரணங்களை ஆராய விரும்பவில்லை. அது அத்தனை இங்கீதமும் அல்ல என்கிறார்கள். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை போல, யார் வீட்டில்தான் சண்டை இல்லை சொல்லுங்கள் என்கிறார்கள்.

பழைய விஷயம்
எனவே பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறும் இவர்கள், தனுஷ்- ஐஸ்வர்யா- ரஜினி தொடர்பான நெகிழ்ச்சியான விஷயங்களை வைரலாக்கி வருகிறார்கள். இளமை திரும்புதே பாடலை பாடியபடி ஐஸ்வர்யாவை தனுஷ் வெட்கப்பட வைத்த பழைய சம்பவத்தையும் வைரலாக்கி வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
அதே போல் கர்ணன் திரைப்படத்திற்கு தனுஷ் தேசிய விருது பெற்ற போது, மகிழ்ந்த ஐஸ்வர்யா, தனது சமூகவலைதள பக்கத்தில் #proudwife என பெருமிதம் பொங்க கூறியதையும் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிடுகிறார்கள். தற்போது இன்னொரு விஷயத்தையும் அவர்கள் தெரிவித்து மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

தனுஷுக்கு ரஜினி பரிசு
ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் கடவுள் பக்தி அதிகம். தனது தந்தை ரஜினியுடன் அண்மையில் இமயமலைக்கு ஐஸ்வர்யா பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அது போல் தனுஷும் தீவிர சிவ பக்தர், தேனியில் உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு அவர் அவ்வப்போது சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் தீவிர சிவ பக்தரான தனுஷுக்கு ரஜினிகாந்த் கொடுத்த ஒரு பரிசு பொருள் குறித்து ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிடுகிறார்கள். அது என்ன பொருள் என்றால் ருத்ராட்சம். இதைத்தான் தனுஷுக்கு ரஜினி கொடுத்துள்ளாராம்.
Recommended Video

அருணாச்சலம்
ருத்ராட்சத்தை ரஜினிகாந்தும் அணிந்துள்ளார். அவரது கடவுள் பக்தியை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் நடித்த அருணாச்சலம் திரைப்படமும் ருத்ராட்சத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதை அனைவரும் அறிவர். தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்து சென்றதாக சொல்லப்பட்டாலும் ரஜினி தனுஷை அருமையான மருமகன் என மேடையில் பாராட்டியது, ருத்ராட்சத்தை பரிசாக கொடுத்ததை எல்லாம் பார்க்கும் போது தனுஷுக்கும் ரஜினிக்கும் இடையேயான பிணைப்பு நன்றாக இருந்ததாகவே தெரிகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications