கால் மேல கால் போடுவீங்களா? பாஸ்போர்ட் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுபோல் உட்காருவீரா? ஆளுமை திறன் என்ன?
சென்னை: நீங்கள் உட்காரும் ஸ்டைலை வைத்தே உங்கள் ஆளுமை பண்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லிவிடுவோம். ஒவ்வொரு மேனரிஸத்திலும் ஒவ்வொருவரது குணங்கள் உண்டு என்பதை நம்புவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
ஜாதகம், நட்சத்திரம், சோழி உள்ளிட்டவை மூலம் பிறந்த ஒருவரது குணத்தை அப்படியே புட்டு புட்டு வைக்க முடியும். சாஸ்திரங்களை யாருமே மறுக்க முடியாது. இவ்வளவு ஏன் மச்சங்களை வைத்தே சொல்லிவிடலாம்.

அது போல் கால் விரல்கள், கை விரல்கள், நெற்றியின் அமைப்பு உள்ளிட்டவைகளை வைத்தும் ஒருவரது குணத்தை சொல்லலாம். இவ்வளவு ஏன் உட்காரும் ஸ்டைலை வைத்தும் ஆளுமை பண்புகள் என்னென்ன இருக்கிறது என்பதை புட்டு புட்டு வைத்துவிடலாம்.
முழங்கால்கள் நேராக இருந்தால்: ஒரு 5 போஸ்கள் உள்ளன. உட்காருபவர்கள் இப்படி உட்கார்ந்தால் அவர்களுக்கான ஆளுமை பண்பு இதுதான் என அடித்துச் சொல்ல முடியும். அதாவது முழங்கால்களை நேராக வைத்துக் கொண்டு உட்கார்ந்தால் நீங்கள் திறமைசாலி. அதிர்ஷ்டத்தை நம்பாமல் திறமையையே நம்புவீர்கள். எப்போதும் பாசிட்டிவ் எண்ணம் கொண்டவர்கள். இது போல் உட்கார்ந்தால் அவர்கள் புத்திசாலிகள், பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள், நேர மேலாண்மையை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என்று அர்த்தம். எல்லாவற்றையும் விட நேர்மையானவர்.
முழங்கால்களுக்கு இடையே இடைவெளி: ஒரு வேளை நீங்கள் உட்காரும் போது முழங்கால்களுக்கு இடையே இடைவெளி இருந்தால் உங்களால் லேட்டாச்சு என்ற பிரச்சினையே இருக்காது. கடினமான நேரத்தில் கூட அமைதியாக இருப்பீர்கள். சுயநலமாக இருந்தாலும் பிறரை பற்றியும் சிந்திப்பீர்கள். அகங்காரமானவர்களாக தெரியலாம். ஆனால் சுயமரியாதை குறைவாக கொண்டிருப்பீர்கள். நீங்கள் எளிதாக டைவர்ட் செய்யப்படலாம், எல்லாவற்றுக்கும் கவலைப்படுவீர்கள். ஆனால் எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டீர்கள். அதிகம் சிந்திப்பீர்கள். விரைவாக சலிப்படைவீர்கள்.
கால்மேல் கால் போட்டு அமர்பவரா: இப்படி உட்கார்ந்தால் சிறந்த உரையாடலை கடைப்பிடிப்பீர்கள். நீங்கள் பேசுவதில் அதிக மகிழ்ச்சி அடைவீர்கள். எளிதாக வழிநடத்தலாம். சிறந்த படைப்பாளிகள், கற்பனை திறன் அதிகம் உள்ளது. யாரையும் உடனே நம்ப மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒருவரை அனுமதிக்க உங்களுக்கு நிறைய நேரம் பிடிக்கும். அடிக்கடி கனவு காண்பவர். தன்னம்பிக்கைவாதி.
கணுக்கால்களை குறுக்காக போட்டு அமர்வீர்களா: இப்படி அமர்ந்தால் நீங்கள் எல்லாவற்றிற்கும் அஸ்ஜஸ்ட் செய்து கொண்டே இருப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். சூழலுக்கு ஏற்ப அமைதியாக இருக்கவும் பேசவும் உங்களுக்கு தெரியும். சுற்றியுள்ளவர்களையும் தன்னம்பிக்கையுடன் இருக்க செய்வீர்கள். எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க மாட்டீர்கள். ராஜதந்திரம் நிறைந்தவர். எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.
4 வடிவம் போல் உட்காருவோர்: உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகம், மிகவும் கனவு காண்பீர். நிஜ உலகில் இருந்து விலகி அடிக்கடி சிந்தனையில் தொலைந்து போவீர்கள். பெரிய ஆளுமை கொண்டவர். எனினும் கால்களை குறுக்கே போட்டு உட்காருவதால் தற்காப்பு மனப்பான்மையும் அதிகம் இருக்கிறது. இப்படி உட்காருவதை பிறர் பார்த்தால் நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக பிறர் நினைப்பார்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள், எதையும் நிறைவேற்ற உங்கள் ஆற்றலை செலுத்துவீர்கள், இலக்குகளை நிர்ணயித்து அவறறை அடையும் வரை பாடுபடுவீர்கள், ஆதிக்கம் கொண்டவராகவும் விவாதிப்பவராகவும் போட்டி போடும் மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பீர்கள். என்ன நாங்கள் சொன்னது சரியா என்பதை கமென்டில் சொல்லுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications