போலீஸ் சீருடை தொடங்கி.. இனி எல்லா இடத்திலும் கேமரா.. தமிழக சாலை விதிகளில் அதிரடி மாற்றம்.. முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் போக்குவரத்து போலீசார் விதிகளில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறுபவர்களை கேமரா வைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

Do you know that camera will catch you in road hereafter? Tamil Nadu traffic rules Changed

டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடாதது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.

தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும்.

Do you know that camera will catch you in road hereafter? Tamil Nadu traffic rules Changed

புதிய விதி: இது போக தமிழ்நாட்டில் போக்குவரத்து போலீசார் விதிகளில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறுபவர்களை கேமரா வைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி சாலைகளில் இருக்கும் அனைத்து சந்திப்புகளில் இனி கேமரா பொருத்தப்படும். நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் கேமரா பொறுத்தப்படும்.

போக்குவரத்து போலீசார் தங்களின் உடலில் கேமரா பொருத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் ரெக்கார்ட் செய்யப்படும்.

போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் இனி கேமரா இருக்கும். இதனால் போலீஸ் சேசிங் அல்லது இரவு நேர ரோந்துகளில் போலீஸ் முக்கிய விஷயங்களை ரெக்கார்ட் செய்ய முடியும்.

இது போக சாலைகளில் வேகமாக வாகனம் செல்லும் போது அதை எளிதாக கண்டுபிடிக்க தானியங்கி வண்டி எண் அறியும் தொழில்நுட்பம் கொண்ட சென்சார்கள் சந்திப்புகளில் பொருத்தப்படும்.

Do you know that camera will catch you in road hereafter? Tamil Nadu traffic rules Changed

அதேபோல் சாலையில் பல்வேறு விதி மீறல் செய்யும் நபர்களை கேமரா மூலம் கண்காணித்து அவர்கள் நம்பர் பிளேட்டை வைத்து தானாக அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த அபராதத்தை போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விதிக்க முடியும். உங்களை அவர்கள் பார்க்கக் வேண்டிய அவசியம் இல்லை.

அதாவது நீங்கள் சாலையில் ஹெல்மெட் இன்றி செல்கிறீர்கள். போலீசார் சாலையில் இல்லை என்றால் கேமரா உங்களை பதிவு செய்யும். பின்னர் பைக் நம்பரை வைத்து உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

சென்னையில் உள்ள இந்த வசதி தமிழ்நாடு முழுக்க கொண்டு வரப்பட உள்ளது.

மெயில், போன் மெசேஜ் மூலம் இந்த அபராத செல்லான் செலுத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+