உங்க பைக்கை.. உங்க நண்பர் ஓட்டி விதி மீறினால் யாருக்கு அபராதம்? ரூல்ஸை மாற்றிய தமிழ்நாடு.. முக்கியம்
சென்னை: தமிழ்நாடு சாலை விதிகளில் பல நாட்களாக மக்கள் வைத்த கோரிக்கை ஒன்றிற்கு போக்குவரத்து துறை செவி சாய்த்து உள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாவே சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.
தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும்.
புதிய விதி: அந்த வகையில் தமிழ்நாடு சாலை விதிகளில் பல நாட்களாக மக்கள் வைத்த கோரிக்கை ஒன்றிற்கு போக்குவரத்து துறை செவி சாய்த்து உள்ளது.
முன்பெல்லாம் உங்கள் பைக்கை உங்கள் நண்பர் எடுத்து செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி எடுத்து செல்லும் பட்சத்தில் அவர் ஹெல்மெட் போடாமல் விதியை மீறினால்.. உங்களின் வண்டி ஆர்சி புக் நம்பருக்கு பைன் போடப்படும். பெரும்பாலான நேரங்களில் டிரைவரின் லைசன்ஸ் நம்பருக்கு பைன் போடாமல் ஆர்சி புக் நம்பருக்கு பைன் போடுவார்கள்.

சில சமயங்களில் மட்டுமே டிரைவருக்கு பைன் போடப்படும். இனிமேல் விதி மீறல் புகார்களுக்கு டிரைவர் மீதுதான் பைன் போடப்படும். ஒருவேளை.. உங்கள் நண்பர்.. உங்கள் வடியை எடுத்துகொண்டுசென்று சிக்னலை மதிக்காமல் செல்கிறார். வண்டி நிற்காமல் போகும் பட்சத்தில் வண்டி நம்பரை வைத்து டிராபிக் போலீஸ் உங்கள் வண்டி மீது பைன் போடுவார்.
ஏனென்றால் டிரைவர் நிற்காத காரணத்தால் அவரின் விவரங்களை போலீஸ் எடுக்க முடியாது. அப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் அபராதம் செலுத்த செல்லும் போது.. வண்டியை நீங்கள் ஓட்டவில்லை என்பதற்கான ஆதாரத்தை காட்டினால் வண்டி மீதான அபராதம் நீக்கப்பட்டு அதை ஓட்டிய உங்கள் நண்பர்.. அதாவது டிரைவர் மீது புதிய அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய விதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சில கவனிக்க வேண்டிய விதிகள்: இது போக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரேஸிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் அதற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.ரிஜிஸ்டிரேஷன் இல்லாத வாகனத்தை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications