தப்பி தவறியும் கூட நோ காஸ்ட் EMIஇல் பொருளை வாங்காதீங்க.. மறைந்து இருக்கும் பெரிய ஆப்பு! அம்மாடி
சென்னை: இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் இஎம்ஐ மூலமாகவே பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த இளைஞர்களைக் கவர பெரும்பாலான நிறுவனங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ, அதாவது வட்டி செலுத்தத் தேவையில்லை என்ற வசதியை வழங்குகிறார்கள். உண்மையில் இந்த நோ காஸ்ட் இஎம்ஐ என்றால் என்ன.. இதன் பிளஸ், மைனஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது பெரும்பாலான ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் "Buy Now, Pay Later" ஆப்ஷனை தான் அதிகம் விளம்பரப்படுத்துகிறார்கள். கிரெடிட் கார்ட் மூலம் நீங்கள் எந்தவொரு பொருளாக இருந்தாலும் ஈஸியாக வாங்கலாம்.

அதற்கு நீங்கள் வாங்கும் போது பணம் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.. சொல்லப்போனால் நீங்கள் ஒரு ரூபாய் கூட இதில் கட்ட தேவையில்லை. இதனால் இளைஞர்கள் பலரும் இந்த வழியிலேயே பல்வேறு பொருட்களை வாங்குகிறார்கள்.
நோ காஸ்ட்: அதிலும் குறிப்பாக no-cost EMI என்பது தான் பலரையும் கவர்ந்து இழுக்கிறது. ஏனென்றால் பொதுவாக EMI மூலம் பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் 15 முதல் 20% வரை அதற்கு வட்டி கட்ட வேண்டும். ஆனால், இந்த no-cost EMIஇல் வாங்கினால் கூடுதலாக நாம் ஒரு ரூபாய் கூட கட்ட தேவையில்லை. ஆனால், இந்த no-cost EMI என்றால் என்ன.. இது எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. நோ-காஸ்ட் EMI என்பது முழுக்க முழுக்க செலவே இல்லாத இஎம்ஐ முறை இல்லை.. அதில் மறைமுகமாக சில கட்டணங்களை நம்மிடம் வசூலிக்கவே செய்கிறார்கள். உதாரணத்திற்குப் பார்த்தோம் என்றால் நீங்கள் ரூ.30 ஆயிரத்திற்கு ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
வழங்குவது யார்: அதை 6 மாத கால நோ காஸ்ட் இஎம்ஐ முறையில் வாங்குகிறார்கள். ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம் என்றால் நீங்கள் ரூ. 5 ஆயிரம் விகிதம் 6 மாதங்களுக்குக் கட்டினால் போதும். ஆனால், நோ காஸ்ட் இப்படி எளிமையாக இருக்காது. ஏனென்றால் நம்மில் பலரும் நினைப்பதைப் போல இந்த நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனை வழங்குவது வங்கிகள் இல்லை. சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களே வழங்குகிறது. அதாவது நீங்கள் வங்கிகளுக்கு வழக்கம் போல வட்டியைச் செலுத்துவீர்கள். ஆனால், அதை முன்கூட்டியே டிஸ்கவுண்டாக கழித்துவிடுவார்கள்,
எப்படி இயங்கும்: அதாவது இந்த 6 மாதத்திற்கு 16%, அதாவது கிட்டத்தட்ட ரூ. 1400 ரூபாய் வட்டியாகக் கட்ட வேண்டி இருக்கும். எனவே, உங்கள் பொருளின் மதிப்பான ரூ.30 ஆயிரத்தில் இந்த ரூ. 1,400 ரூபாயைக் கழித்துக் கொள்வார்கள். நமக்கு பில் ஆகி நாம் இஎம்ஐ செலுத்துவதே மீதமுள்ள 28,400 ரூபாய்க்குத் தான் இருக்கும். என்னப்பா எப்படி இருந்தால் என்ன.. எனக்கு வட்டி இல்லாமல் இஎம்ஐ வருதுல்ல அது போதும் என நினைப்பீர்கள்.
ஆனால், விஷயமே அதுதான்.. அதாவது நேரடியாக இஎம்ஐ தொகையில் வட்டியைப் போடாமல் இருப்பதற்குப் பதிலாக இப்படி தள்ளுபடி போலத் தருவதால் நமக்கு நஷ்டம் தான்.. ஏனென்றால் இதில் மறைமுகமாகப் பல கட்டணங்களை நாம் செலுத்த வேண்டி இருக்கும். முதலில் பிராசஸிங் ஃபீஸ். உங்கள் இஎம்ஐ கட்டண முறையைப் பரிசீலிக்க இந்தக் கட்டணம் எனச் சொல்லப்படுகிறது. இது வங்கிகளைப் பொறுத்து ரூ.99 முதல் ரூ. 300 வரை இருக்கும். அதற்குத் தனியாக 18% ஜஎஸ்டி வரியும் இருக்கு.
என்ன சிக்கல்: அடுத்து மாதாமாதம் இஎம்ஐ தொகை கட்டுவோம்.. இத்துடன் இதற்கான வட்டியை நாம் தனியாகச் செலுத்தியே தீர வேண்டும். அதாவது இஎம்ஐ தொகை மட்டுமே தள்ளுபடியாகக் கொடுத்துள்ளார்களே தவிர ஜிஎஸ்டி அதில் வராது. எனவே, அதிலும் நாம் சில நூறு ரூபாய் வரை இப்படிக் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
இப்படி தான் நோ காஸ்ட் இஎம்ஐ என்று போட்டு இளசுகளைக் கவரும் பெரிய பெரிய நிறுவனங்கள் மறைமுகமாகக் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள். எனவே, இந்த வலையில் விழுந்துவிடாதீர்கள். கண்டிப்பாக அவசரமாகத் தேவையான பொருட்களை மட்டும் இதுபோல இஎம்ஐ-இல் வாங்கலாம்..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications