இத்தனை கோடிகளா? தமிழக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முதலிடத்தில் கர்நாடகா
சென்னை: இந்தியாவிலேயே எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளதாக ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 11வது இடத்தில் தமிழ்நாடு உள்ள நிலையில் தமிழக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், அவர்கள் மீது உள்ள வழக்குகள், அவர்களின் கல்வி தகுதிகள் உள்ளிட்ட விபரங்களை ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வழங்கி வருகிறது.

மேலும் நாட்டில் உள்ள எம்பிக்கள், எம்எல்எல்கள் தொடர்பாக பல்வேறு விபரங்களை இந்த சங்கம் வெளியிட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்எல்ஏக்களின் சராசரி சொத்து விபரங்களை மாநிலங்கள் வாரியாக அந்த சங்கம் வெளியிட்டுள்ளது.
ஜனநாயக சீர்த்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காட்சி அமைப்புடன் சேர்ந்து இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. அப்போது தற்போதைய எம்எல்ஏக்களின் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு இந்த தகவல்கள் திரட்டப்பட்டன. தற்போது அதுதொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
இந்தியாவில் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு என்பது நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள கர்நாடகாவில் 224 எம்எல்ஏக்களில் 223 பேரின் சொத்து விபரங்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன்படி பார்த்தால் கர்நாடகாவில் ஒரு எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ.64.39 கோடியாக உள்ளது.
அதன்பிறகு 2வது இடத்தில் ஆந்திரா உள்ளது. ஆந்திராவை பொறுத்தமட்டில் 174 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.28 கோடியாக உள்ளது. அதன்பிறகு எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பானது ரூ.23 கோடி என்ற அளவில் மகாராஷ்டிரா 3வது இடத்திலும், ரூ.20 கோடி சராசரி சொத்து மதிப்புடன் கோவா 4வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் 5வது இடத்தில் அருணாச்சல பிரதேச மாநிலம் உள்ளது. இங்கு எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.19 கோடியாக உள்ளது. எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பில் தாலா ரூ.16 கோடியுன் ஹரியானா 6வது இடத்திலும், குஜராத் 7 வது இடத்திலும் உள்ளன. ரூ.14 கோடியுடன் டெல்லி 8 வது இடத்திலும், தலா ரூ.13 கோடியுடன் தெலங்கானா, இமாச்சல பிரதேச மாநிலங்கள் முறையே 9, 10வது இடத்திலும் உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 224 எம்எல்ஏக்களின் விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ.12 கோடியாக இருக்கிறது. இதன்மூலம் இந்த பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் புதுச்சேரி 16வது இடத்தில் இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.9 கோடியாக உள்ளது. உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் எம்எல்ஏக்களின் சராரசி சொத்து மதிப்பு ரூ.8 கோடியாக உள்ளது. இதனால் இந்த பட்டியலில் உத்தர பிரதேசம் 19 வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் கடைசி 3 இடத்தில் கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இதில் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து ரூ.3 கோடி என கேரளா 28 வது இடத்திலும், எம்எல்ஏக்களின் சராசரி சொத்து ரூ.2 கோடி என்ற அளவில் மேற்கு வங்கம் 29 வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.1 கோடி என மிகவும் குறைந்து திரிபுரா மாநிலம் கடைசி இடமான 30 வது இடத்தில் உள்ளது என ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications