வங்கி விடுமுறை.. பேங்க் போறீங்களா? ஜனவரி மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? கவனியுங்க
சென்னை: புதுவருடம் துவங்கியிருக்கும் நிலையில், எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறைகள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வங்கி விடுமுறைகளில் சிலவற்றை மட்டும் அரசாங்கம் நிர்ணயிக்கிறது.. அதேபோல இந்தியா முழுவதுமுள்ள வங்கிகள் தேசிய விடுமுறை நாட்களில் மூடப்படுவது வழக்கம்.

வங்கிகள்: குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் ஆர்பிஐ எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதற்கான விடுமுறை பட்டியலை வெளியிடும்.. வங்கிகளின் விடுமுறை நாட்களை, வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதன் மூலம், அவர்கள் அந்த நாட்களில் வங்கிக்கு சென்று வீணாக அலைச்சல் தவிர்க்கப்படும்.. நேரமும் மிச்சப்படுத்தப்படும்.
தற்போது புதுவருடம் துவங்கியிருக்கும் நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டும் எந்தெந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை பற்றின லிஸ்ட் வெளியாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் இதற்கேற்ப அதற்கேற்ப தங்கள் நிதி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதை உறுதி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த பட்டியலை முன்கூட்டியே வெளியிடுகிறது.
விடுமுறை: அதன்படி ஜனவரி மாதத்தில் 16 மட்டும் நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2வது, 4வது சனி, ஞாயிறு மற்றும் பிற பிராந்திய விடுமுறைகள் போன்றவை அனைத்தும் இதில் அடங்கும்..
அறிவிப்புகள்: எனினும், இந்தியா முழுமைக்கும் இந்த விடுமுறைகள் பொருந்தாது... அந்தந்த மாநிலத்தை பொறுத்தே வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும். அந்தவகையில், தமிழகத்துக்கு வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.. வங்கி விடுமுறை நாட்களை பார்த்து, அதற்கேற்ப வேலையை பொதுமக்கள் திட்டமிட்டு கொள்ளலாம். அதேசமயம், வங்கிகள் விடுமுறையாக இருந்தாலும்கூட ஆன்லைன் பரிவர்த்தனைகள், ஏடிஎம் வசதிகள் உள்ளது கவனிக்கத்தக்கது.
ஜனவரி 1 (திங்கட்கிழமை) - புத்தாண்டு தினம்
ஜனவரி 11 (வியாழக்கிழமை) - மிஷினரி தினம்(மிசோரம்)
ஜனவரி 12 (வெள்ளிக்கிழமை) - சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
ஜனவரி 15 (திங்கட்கிழமை) - பொங்கல்
ஜனவரி 16 (செவ்வாய் கிழமை)- டுசு பூஜை (மேற்கு வங்கம் மற்றும் அசாம்)
ஜனவரி 17 (புதன்கிழமை) - குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
ஜனவரி 23 (செவ்வாய் கிழமை) - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி
ஜனவரி 25 (வியாழக்கிழமை) - மாநில தினம் (இமாச்சல பிரதேசம்)
ஜனவரி 26 (வெள்ளிக்கிழமை) - குடியரசு தினம்
ஜனவர் 31 (புதன்கிழமை) - Me-Dam-Me-Phi (அசாம்)
இதெல்லாம் நாடெங்கும் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்குமான விடுமுறை தினங்கள்தான். இனி தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை நாட்களாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

ஜனவரி 7 - ஞாயிற்றுகிழமை
ஜனவரி 13 - இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 7 - ஞாயிற்றுகிழமை
ஜனவரி 13 - இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 14 - ஞாயிற்றுகிழமை
ஜனவரி 15 - பொங்கல்
ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - உழவர் திருநாள்
ஜனவரி 21 - ஞாயிற்றுகிழமை
ஜனவரி 26 - குடியரசு தினம்
ஜனவரி 27 - 4வது சனிக்கிழமை
ஜனவரி 28 - ஞாயிற்றுகிழமை
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications