Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பானிக்கு சிக்கல்.. இந்தியாவில் கால் பதிக்கிறார் எலான் மஸ்க்.. ஸ்டார்லிங்க் பெற கட்டணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் Starlink சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான கட்டணம் எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில் Starlink சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. தற்போது, ​​இந்தியாவில் Starlink சேவைக்கான விலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், ஸ்டார்லிங்க் நிறுவன அதிகாரிகளின் கூற்றுப்படி.. ஸ்டார்லிங்க் அமைக்க முதல் ஆண்டில் சுமார் ரூ.1,58,000 செலவாகும். இரண்டாம் ஆண்டு முதல், சேவைக்கு 30 சதவீத வரி உட்பட சுமார் ரூ.1,15,000 செலவாகும். ஏனெனில் Starlink ஐப் பயன்படுத்தத் தேவையான உபகரணங்கள் ஒருமுறை மட்டுமே வாங்கப்படுகின்றன.

spectrum elon musk

பயனர் உபகரணங்களுக்கான அடிப்படை விலை சுமார் 37,400 ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பயனர்கள் சேவைக்கு கூடுதல் மாதக் கட்டணமாக ரூ.7,425 செலுத்த வேண்டும். இதனால் ஜியோ, ஏர்டெல் பிராட்பேண்ட் ஃபைபர் இணைய சேவையை விட இதற்கு அதிக கூடுதல் தொகை செலுத்த வேண்டி இருக்கும்.

ஸ்டார்லிங்க் சேவை: எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணைய நிறுவனமான ஸ்டார்லிங்க் இந்தியாவிற்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. மத்திய அரசாங்கத்தின் டேட்டா விதிகள், பாதுகாப்புத் தேவைகளுக்கான விதிகளை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய சந்தையில் ஸ்டார்லிங்க் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையுடன் (DoT) பல சந்திப்புகளுக்குப் பிறகு ஸ்டார்லிங்க் இந்தியாவிற்குள் வருவது உறுதியாகி உள்ளது. அதன்படி ஸ்டார்லிங்க் நிறுவனம் GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெறுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டது. ஸ்டார்லிங்க் அதன் ஒப்பந்தத்தை இன்னும் முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்றாலும், வாய்மொழி வழியாக மத்திய அரசின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

மத்திய அரசாங்கத்தின் டேட்டா விதிகள், பாதுகாப்புத் தேவைகளுக்கான விதிகளை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டதால் விரைவில் இந்திய மார்க்கெட்டில் அதிகாரபூர்வமாக அந்த நிறுவனம் நுழையும்.

எப்படி இயங்கும்: ஸ்டார்லிங்க் பற்றி தெரிந்து கொள்ளும் முன் இணையம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இணையம் என்பது சாட்டிலைட் மூலம் நேரடியாக வருகிறது என்றால் அது தவறு. பொதுவாக இணையம் இப்போது கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே வழங்கப்படுகின்றன. ஃபைபர் எனப்படும் கண்ணாடி இழைகள் மூலம் இந்த இணையம் கடத்தப்படுகிறது. இந்த இணைய அலைக்கற்றையை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் அதை தங்கள் பிராட்பேண்ட் மூலமாகவும், டவர்கள் மூலமாகவும் வீடுகளுக்கு இணையமாக வழங்குகின்றன.

இதைத்தான் ஸ்டார்லிங்க் உடைக்கிறது. இது நேரடியாக சாட்டிலைட் வழியாக இணையத்தை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு Starlink internet satellites என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 14600 சாட்டிலைட்டுகள் விண்வெளியில் ஏவப்பட்டு அவை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவைதான் பூமியில் ஸ்டார்லிங்க் ரவுட்டர்களை பயன்படுத்துபவர்களுக்கு இணையத்தை வழங்குகின்றது. இதன் மூலம் உலகம் முழுக்க மூலை முடுக்கெல்லாம் இணையத்தை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் முடிவு செய்துள்ளது. 400 செயற்கைகோள்கள் மூலம் அடிப்படை இணைய சேவையும், 800 செயற்கைக்கோள்கள் மூலம் வேகமான இணைய சேவையையும் ஸ்பேஸ் எக்ஸ் வழங்கும்.

இப்போது அதிவேக இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உலகிலேயே அதிக செயற்கைகோள்கள் கொண்ட தனியார் நிறுவனம் என்ற சிறப்பை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ளது. விண்வெளியில் ரயில் போல வலம் வரும் இவை பூமியின் எந்த மூலையில் வேண்டுமானாலும் அந்த நாடு அனுமதித்தால் இணைய சேவையை வழங்க முடியும்.

எப்படி செயல்படும்?: உலகின் எல்லா பகுதிக்கும் ஃபைபர் கேபிளை கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல. இதற்காகவே சாட்டிலைட் உதவியுடன் நேரடியாக இணைய சிக்னல்களை ஸ்பேஸ் எக்ஸ் பூமிக்கு அனுப்பும். இதை எங்கிருந்தும் பயன்படுத்தலாம். ஏற்கனவே சில இணைய சாட்டிலைட் இருந்தாலும் அவை பூமிக்கு மிக தூரத்தில் இருப்பதால் தினசரி பயன்பாட்டிற்கு அவ்வளவு பயனுடையது அல்ல. ஆனால் ஸ்டார்லிங்க் மிக அதிக வேகத்தை தரக்கூடியது.

இதற்காக அந்த நிறுவனம் வழங்கும் டிஷ், ரவுட்டர், மற்றும் கேபிள் ஆகியவற்றை பயன்படுத்தி வீட்டில் செட் அப் செய்ய வேண்டும். வீட்டில் கேபிளுக்கு டிஷ் செட் ஆப் பாக்ஸ் வைப்பது போலத்தான் இதுவும். சாட்டிலைட் மூலம் இணையத்தை பெற்று இவை டிஷ் வழியாக உங்கள் வீடு ரவுட்டருக்கு சிக்னல் வழங்கும்.

வேகத்தைப் பொறுத்தவரை, நீங்கள் தேர்வு செய்யும் திட்டம் மற்றும் உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து 25 Mbps முதல் 220 Mbps வரையிலான இணைய வேகத்தை Starlink வழங்குகிறது. இது மற்ற செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் வேகத்தை விட மிக வேகமானது. பல பாரம்பரிய பிராட்பேண்ட் சேவைகளுடன் ஒப்பிடும் போது இவை அதி வேகம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+