ஆமா பட்டா, சிட்டானு சொல்றோமே! அந்த ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? நத்தம்ன்னா என்ன?
சென்னை: பட்டாவுக்கும் சிட்டாவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நத்தம் நிலம் என்றால் என்ன, அவை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து சுயத்தொழில் தொடங்குவோம் என்ற சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: #சொத்துகள் சார்ந்த தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள்: பட்டா என்றால் என்ன? 15 பட்டா வகைகள்.

பட்டா சிட்டா என்றால் என்ன? பட்டா என்பது ஒரு நபர் அல்லது நபர்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமையை சட்டரீதியாக நிரூபிக்க உதவும் ஆவணம் ஆகும். பட்டா என்பது வருவாய் துறையினரால் நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும் பதிவு செய்யப்பட்ட சொத்தின் ஆவணம் ஆகும்.
பட்டா சிட்டா வேறுபாடுகள்: பட்டா என்பது நிலத்தின் உரிமையை காட்டும் ஆவணம் ஆகும். சிட்டா என்பது ஒரு வருவாய் ஆவணம் ஆகும். சிட்டாவில் நிலத்தின் விவரங்கள் மற்றும் அரசுக்கு செழுத்தவேண்டிய வருவாய் வரி விவரங்கள் அடங்கி இருக்கும்.
பட்டா வகைகள்
நில ஒப்படைப்பு பட்டா Assignment Land: அரசு நிலங்களை வீடு நிலம் மனை இல்லாத ஏழை மக்கள், முன்னால் இரானுவத்தினர் போன்றோருக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த அளவு பணம் பெற்றுக்கொண்டோ பட்டா வழங்கும். இதை நில ஒப்படைப்பு பட்டா என்பர். இதை குறிப்பிட்ட காலத்திற்கு மற்றவருக்கு விற்க கூடாது என்பது போன்ற கன்டிசன்கள் இருக்கும்.
ஏடி கண்டிசன் பட்டா- AD Assignment Land(Adi Dravidar): உபரியாக இருக்கும் நிலத்தை மனைகளாக பிரித்து நிலமில்லாத பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படுவது ஏடி கண்டிசன் பட்டா எனப்படும். இந்த கண்டிசன் பட்டாவில் உள்ள நிலத்தை குப்பிட்ட காலத்திற்கு யாருக்கும் விற்க கூடாது போன்ற கண்டிசங்கள் இருக்கும். இதில் பட்டா பெறுபவரின் புகைப்படமும் தனி வட்டாசிரியரின் கையொப்பமும் இடம் பெற்றிருக்கும். இது மேனுவல் பட்டாவாக இருக்கும். இதில் பெண்களின் பெயரில்தான் பட்டா வழங்கப்படும். மேலும் விவசாயம் செய்வதற்கு நிலமில்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒதுக்கப்படும்.
நத்தம் நிலம்: நத்தம் என்றால் குடியிருப்பு ஆகும். அரசு புறம்போக்கு நிலத்தில் வாழும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு , தாங்கள் வாழும் கிராமத்தில் வழங்கப்படுவது நத்தம் நிலமாகும். இத்தகைய நத்தம் குடியிருப்பு முறையானது வெள்ளைக்காரன் காலத்திலேயே வகைப்படுத்தப்பட்டது. இதனால் நத்தம் நிலம் பழமையான் ஊர்களில் அமைந்து இருக்கும். நத்தம் நிலத்திற்குதான் தோராய பட்டா மற்றும் தூய பட்டா வழங்கப்பட்டது.

தோராய பட்டா: நத்தம் நிலத்தில் உள்ள குடியிருப்புகள் வீடுகள் பாதைகள் தெருக்கள் முக்கிய சாலைகள் நீர் நிலைகள் போன்றவற்றை சர்வே செய்து அந்த நிலத்தில் உள்ளவர்களுக்கு தனித்தனி சர்வே நெம்பர் கொடுத்து சில பிழைகள் அல்லது குறைகள் மற்றும் திருத்தம் செய்யத்தக்க தோராயமான பட்டா வழங்கப்படும். ஒரு குருப்பிட்ட காலத்திற்கு இதில் உள்ள குறைகள் சரிசெய்வதற்கு தற்காலிகமாக கொடுக்கப்படும் பட்டாவாகும்.
தூய பட்டா: நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்கு முதலில் தோராய பட்டா வழங்கப்படும். தோராய பட்டாவில் உள்ள குறைகள் பிழைகள் தகவல்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் அவர்களுக்கு நத்தம் நிலம் தூய பட்டாவாக கொடுக்கப்படும். நத்தம் தூய பட்டாவின் முன்புறம் நிலத்தின் உரிமைபற்றிய ஆவணத்தகவல்கள் இருக்கும், பின்புறம் நிலத்தின் வரைபடம் இருக்கும். இது ஒரு மேனுவல் பட்டாவாகும்.
TSLR பட்டா Town Survey Land Record: கிராம விவசாய நிலத்தை பட்டா என்ற ஆவணம் மூலம் பெறப்படுகிறது. கிராமபுற விவசாய நிலத்தை தவிர நகரத்தில் உள்ள நிலத்தின் அளவு மற்றும் பதிவு ஆவணம் பற்றிய விவரக்குறிப்புகள் உள்ள TSLR Town Survey Land Record மூலம் பட்டாவாக கொடுக்கப்படுகிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நிலங்களை துல்லியமாக சர்வே செய்து அங்கு குடியிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும். TSLR பட்டா எடுக்க நகரம் பிளாக் மற்றும் வார்டு போன்ற பிரிவுகளில் இருக்கும்.
UDR பட்டா UDR- Updating Data Registry: தமிழ்நாடு முழுவதும் உள்ள நத்தம் நிலத்தை தவிர முறைப்படுத்தாத நிலங்கள், முறையான ஆவணங்கள் பூமி நிலங்கள், சரியாக வரையரை செய்யாத நிலங்கள் அனைத்தையும் நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி, சர்வே செய்து முறையாக ஆவணப்படுத்தி கணிணி மயமாக்கப்பட்டது. இந்த கணிணிமயமாக்கும் வேலை 1979 முதல் 1989 வரை சுமார் 10 வருடங்களாக இந்த பட்டா தரவுகள் புதிபிக்கப்பட்டது. இன்று நாம் ஆன்லைனில் பார்க்க உள்ள பட்டா ஆவணங்கள் இதன் அடிப்படையிலேயே உள்ளது.
2C பட்டா- மர பட்டா - தூசு பட்டா: அரசு நிலத்தில் உள்ள புளியமரங்கள், பனை மரங்கள் போன்ற கனிதரும் மரங்களை பராமரிக்கவும் அவற்றை அனுபவிக்கவும் ஒருவருக்கு உரிமையளித்து பட்டா வழங்கப்படும். இதுவே 2C பட்டாவாகும். 2C பட்டாவானது 2ம் நெம்பர் கிராம கணக்கு புத்தகத்தில் C பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும். இதுவே 2C பட்டாவாகும். இதை மர பட்டா எனவும் அழைக்கப்படும். மேலும் இதை பேச்சு வழக்கில் தூசு பட்டா எனவும் அழைப்பர்.
F பட்டா: ஒரு காலத்தில் ஒரு சில குடும்பங்களே அளவுக்கு அதிகமான விவசாய நிலங்களை வைத்து இருந்தனர். இவர்கள் அசைக்க முடியாத நில ஜமீன்தாரர்களாக வாழ்ந்து வந்தனர். பின்னர் இந்த ஜமீன் பரம்பரை நிலங்கள் ஜமீன் ஒழிப்பு மூலம் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அரசின் நில சீர்திருத்த துறை மூலம் பயனாளிகளுக்கு F பட்டா என்ற பெயரில் வழங்கப்பட்டது.

TKT பட்டா: TKT பட்டா என்பது ஆந்திரா மாநிலத்தில் நிலமற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச நில பட்டாவாகும். இதை விற்கவோ வாங்கவோ முடியாது.
D பட்டா: நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஆந்திராவில் வழங்கப்படும் பட்டா D பட்டாவாகும்.
B Memo பட்டா: B Memo பட்டா என்பது நில உரிமைக்கான பட்டாவே இல்லை. அரசின் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற மெமோ நோட்டீஸ் என்ற பெயரே B Memo பட்டாவாகும். இந்த மெமோ உள்ள நிலத்தை அரசு எப்போது வேண்டுமானாலும் காலி செய்ய இயலும்.
தனிப்பட்டா: தனிப்பட்டா என்பது நிலம் முழுவதும் தனிப்பட்ட நபர் ஒருவர் பெயரிலேயே இருக்கும். இந்த பட்டாவில் சர்வே நெம்பர் உட்பிரிவு நெம்பர் ஆகியவை தனியாக இருக்கும். தனிப்பட்டா நில உரிமை ஆவணத்தின் தன்மையில் தனியொருவருக்கு பத்தியப்பட்டதாகும். இதில் பட்டா நெம்பர், சர்வே நெம்பர்,உட்பிரிவு, நிலத்தின் அளவு, FMP வரைபடம் ஆகியவை தெளிவாக இருக்கும்.
கூட்டு பட்டா: கூட்டு பட்டாவில் ஒன்றுக்கு மேற்பட்ட நில உரிமையாளர்கள் இருப்பார்கள். ஆனால் யார் யாருக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று தெரியாது. யார் நிலம் எங்கு உள்ளது என்று தெரியாது. ஒருவருக்கு அதிகமாகவோ மற்றவர்கள் குறைந்த அளவிலோ நிலம் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான பட்டாவே இருக்கு. அனைவர் பட்டாவிலும் அனைவர் பெயரும் இருக்கும். உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள அனைவரும் உள்ளடக்கிய பட்டா கூட்டு பட்டாவாகும்.
Manual பட்டா: மேனுவல் பட்டாவானது புதுப்பிக்கப்படாத பழைய பட்டாவாகும். இந்த பட்டா வைத்து இருக்கும் அல்லது பட்டாவே இல்லாமல் பூர்வீககமாக குடியிருப்பவர்கள் தான் பயன் படுத்தும் நிலத்தின் உரிமையான பட்டா தாத்தா பாட்டன் பூட்டன் பங்காளி உறவினர் என்று பெயர் மாற்றாமல் அல்லது வாரிசு என்ற உரிமையில் பெயரை கூட சேர்த்தாமல் இருக்கின்றனர்.
பட்டாவே இல்லாமல் இருப்பதை விட கூட்டு பட்டாவாக இருப்பது சந்தோசம். கூட்டு பட்டாவை விட தனிப்பட்டாவாக இருப்பதே சிறப்பு. தனிப்பட்டாவை வைத்து நம் விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு நிலத்தினை மொத்தமாக வாங்கி மனைப்பிரிவுகளாக பிரித்து விற்கும்போது தனித்தனி பட்டா எண் கிடைக்காது. அதாவது மொத்தமாக ஒரே பட்டா எண்ணாகவே இருக்கும். பட்டா எண் மாறாது. அதற்கு பதிலாக சர்வே எண் உட்பிரிவுகளாக A, B, C,.. என்று பிரிந்து ஒவ்வொரு மனைப்பிரிவுற்கும் தனித்தனி உட்பிரிவுடன் கூடிய சர்வே எண் இருக்கும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications