50 ஆயிரத்திற்கு கீழ் குறையாது போலயே! சீசா விளையாட்டு விளையாடிட்டு இருக்கே இந்த தங்கம்!
சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ஒரு சவரன் எத்தனை ரூபாய்க்கு விற்கப்படுகிறது தெரியுமா? அது போல் தங்கத்தின் விலை என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்து விட்டது.
கடந்த மாதம் 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம் உள்ளிட்டவைகளின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. தொடர்ந்து 4 தினங்களாக விலையில் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் 5 ஆவது நாள் 140 ரூபாய் அதிகரித்தது.

இதையடுத்து கடந்த திங்கள்கிழமை அதே 140 ரூபாய் குறைந்தது. கடந்த 31 ஆம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஜூலை 31 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 51,360 க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 6,420 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் ரூ 91 க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ 91 ஆயிரத்திற்கு விற்பனையானது.
இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 அதிகரித்து, ரூ 51,440 க்கும் கிராமுக்கும் ரூ 10 அதிகரித்து ரூ 6430 க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ 91.70 க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ 700 அதிகரித்து ரூ 91,700 விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 51,680க்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6460-க்கு விற்பனையாகிறது.
அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 91 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ரூ 50 ஆயிரத்திற்கு கீழ் குறையும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் 50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் விலையிலேயே குறைவதும் அதிகரிப்பதுமாக இருக்கிறது.
இந்தியாவில் குறிப்பாக தமிழகம் உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications