அடேங்கப்பா! லெஜண்ட் சரவணனுக்கு இத்தனை கோடி சொத்துகளா.. கிறுகிறுக்க வைக்கும் அண்ணாச்சி
சென்னை: தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
லெஜண்ட் சரவணன் என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அவருடைய விளம்பரங்களில் அவரே ஆடிய டான்ஸ். அதன் பிறகு லெஜண்ட் எனும் படத்தில் அவர் நடித்தது. கடை உரிமையாளர்கள் விளம்பரப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் அளவுக்கு நடித்திருக்க முடியாது.

அதே போல் விளம்பர படங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற நடிகைகளுடன் டான்ஸ் ஆடி 90 ஸ் கிட்ஸ் காதுகளில் புகைச்சலை வரவழைத்தவர். இவருக்கு 53 வயது இருக்கும் என்கிறார்கள். ஆனால் பார்த்தால் அப்படி தெரியவே தெரியாது.
அந்த அளவுக்கு இளமையாக இருப்பார். 20 வயது இளைஞரை போல் சுறுசுறுப்பாக இருக்கும் லெஜண்ட் அண்ணாச்சி கடந்த ஆண்டு தி லெஜெண்ட் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவரே தயாரித்து நடித்த படம். இந்த படத்தை அஜித் விக்ரம் பட இயக்குநர் ஜெடி- ஜெர்ரி ஆகியோ இயக்கி இருந்தனர்.
மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் போட்ட முதலீட்டை எடுத்துவிட்டதாக லெஜண்ட் சரவணனே தெரிவித்திருந்தார். அதே போல் ஓடிடி தளத்திலும் இந்த படம் நம்பர் 1 இடத்தை பிடித்தது. இவரது அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சமூகசேவைகளையும் செய்து வருகிறார். தனது வீட்டில் 3 வேளையும் ஏழை எளியவர்களுக்காக உணவு பரிமாறுகிறார். அத்துடன் படிக்க இயலாதவர்களுக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்கிறார். இவர் தனது மகளுக்கு அண்மையில் தங்கம், வைரம் பதித்த உடையுடன் ஏகப்பட்ட சீர் வைத்து திருமணம் நடத்தி வைத்தார். அந்த பெண் அணிந்திருந்த உடையே பல லட்சங்கள் இருக்கும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி வாயடைக்க வைத்துள்ளது. சென்னையில் சரவணன் அண்ணாச்சி அடுக்குமாடி கட்டடம் கொண்ட துணிக்கடை உள்ளது. நகைக் கடையும் உள்ளது. மேலும் அவருக்கு பல வீடுகள் உள்ளன. சொந்த ஊரான நெல்லையில் பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ளார். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்குமே திருமணமாகிவிட்டது.
இவரது வீட்டில் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். அண்ணாச்சியிடம் 10 க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. இவற்றை நிறுத்த தனது வீட்டில் சூப்பரான விசாலமான பார்க்கிங் வசதியையும் செய்துள்ளார். தன்னுடைய கடை மூலம் சரவணனுக்கு தினமும் 1 கோடி முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை வருமானம் வருவதாக சொல்லப்படுகிறது. அண்ணாச்சிக்கு மொத்த சொத்து மதிப்பும் ரூ 6000 கோடி என கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications