ஒரண்டை தெரியும்.. அது என்ன ஓரடண்ட்? இந்த ஆங்கில வார்த்தையின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
சென்னை: ஆங்கிலத்தில் ஒவ்வொரு வருடமும்.. ஒவ்வொரு நாளும் சில புதிய வார்த்தைகள் அதிக கவனம் பெறும். அந்த வகையில் இன்றைய ஆங்கில வார்த்தை எது என்று பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் ஒவ்வொரு கால கட்டத்திற்கு புதிய வார்த்தை கவனம் பெறும். அல்லது பழைய ஆங்கில வார்த்தைகள் புழக்கத்திற்கு வரும். சமயங்களில் acronym கூட கவனம் பெறும். உதாரணமாக 90ஸ் கிட்ஸ்கள் இடையே OMG, LOL, ROFL போன்ற வார்த்தைகள் கவனம் பெற்றன.

இப்போது அந்த வார்த்தைகள் கூட பழசாகி.. 2கே கிட்ஸ்கள் இடையே DELULU, RIZZ போன்ற வார்த்தைகள் கவனம் பெற்று வருகின்றன. DELULU என்றால் கனவு உலகத்தில் வாழ்வது, தன்னை தானே ஏமாற்றிக்கொள்வது. அதுவே RIZZ ஒருவரை வசீகரிக்க கூடிய வகையில் செயல்படுவது அல்லது எதிர் பாலினத்தை வசீகரிக்கும் திறன் கொண்டிருப்பது ஆகும்.
இப்படி 2கே கிட்ஸ் வார்த்தைகளுக்கு இடையேதான் பழைய ஆங்கில வார்த்தை ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த வார்த்தை ஓரடண்ட்- orotund.
orotund அர்த்தம்: ஓரடண்ட்- orotund இந்த வார்த்தை கடந்த சில நாட்களாக மீண்டும் புழக்கத்தில் வர தொடங்கி உள்ளது. 1800 களில் அதிக புழக்கத்தில் இருந்த பழைய வார்த்தைகளில் ஒன்றாகும்.
ஒருவர் தீவிரமாக பேசுவதை, அழுத்தம் திருத்தமாக பேசுவதை இப்படி குறிப்பிடுவார்கள். அறிஞர் அண்ணாவின் பேச்சுக்கள் அழுத்தம் திருத்தமாக இருக்கும், ஆழமானதாக இருக்கும், அதிர்வை ஏற்படுத்த கூடிய வகையில் இருக்கும் என்பதை ஓரடண்ட்- orotund என்று கூறலாம்.
ஒருவரின் எழுத்துக்கள் இதே அழுத்தத்துடன் சிறப்பாக இருந்தால் அதையும் ஓரடண்ட்- orotund என்று கூறலாம். orotundity, pompous , pretentious ஆகியவை இதே அர்த்தம் கொண்ட ஆங்கில வார்த்தைகள் ஆகும்.
தமிழில் மதுரை ஒரண்டை இழுப்பது என்ற வார்த்தை உள்ளது. ஓரடண்ட் போலவே இதுவும் ஒலி கொண்டது. ஆனால் அதற்கும் இதற்கும் எந்த பொருள் தொடர்பும் இல்லை. ஒரண்டை என்பதன் அர்த்தம்.. வம்பு என்பதாகும்.












Click it and Unblock the Notifications