Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலுக்கு ஒரு லிட்டர் டீசல் போட்டால்! எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்? அதிர்ச்சியளிக்கும் டேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு லிட்டர் டீசலுக்கு ரயிலானது எத்தனை கிலோ மீட்டர் செல்லும் என்பது குறித்து தெரியுமா? இதைத்தான் மைலேஜ் என்கிறோம்.

பொதுவாக புதிதாக கார் அல்லது பைக் என எந்த வாகனங்களை வாங்கினாலும் சரி கடைக்காரரிடம் நாம் கேட்கும் கேள்வி மைலேஜ் என்பதுதான். நாம் புதிய பைக் வாங்கி அதை உறவினர்கள், நண்பர்களிடம் காட்டினாலும் அவர்கள் கேட்கும் கேள்வியும் மைலேஜ் பற்றியதுதான்.

Do you know the mileage of the train per 1 litre diesel

அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் போட்டால் வாகனம் எத்தனை கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்பதுதான் இந்த மைலேஜ். ஒரு கார் ஒரு லிட்டருக்கு 17 கி.மீ. மைலேஜ் கொடுக்கிறது என்றால், இதை வைத்து நாம் எத்தனை கிலோ மீட்டர் செல்ல வேண்டுமோ அத்தனை கிலோ மீட்டருக்கு நாம் எரிபொருளை நிரப்பிக் கொள்ள வசதியாக இருக்கும்.

அதிக மைலேஜ் கொடுத்தால்தான் வாடிக்கையாளர்களுக்கு லாபம். குறைவாக கொடுத்தால் பெட்ரோல் பங்குக்குதான் லாபம். கார், பைக்கை போல் ரயில்களுக்கும் மைலேஜ் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் நிலக்கரியை எரிய வைத்து ரயில் இயக்கப்பட்டது. தற்போது மின்சார ரயில்கள் வந்துவிட்டன.

டீசலில் இயங்கும் ரயில்களும் புழக்கத்தில் இருக்கின்றன. ஒரு ரயிலின் மைலேஜை கண்டுபிடிப்பது என்பது அந்த ரயிலின் பல்வேறு காரணிகளை பொருத்தது. உதாரணமாக ரயிலின் எடை, திறன், பயண தூரம் ஆகியவற்றை பொருத்தது. உதாரணமாக 12 பெட்டிகளை கொண்ட பயணிகள் ரயில் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல 6 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.

இதே 24 பெட்டிகளை கொண்ட சூப்பர் பாஸ்ட் ரயிலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல 6 லிட்டர் டீசலை தேவைப்படுகிறது. 12 பெட்டிகளை கொண்ட எக்ஸ்பிரஸ் ரயிலானது ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல 4.5 லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இந்த மைலேஜ் என்பது ரயில்களின் நிறுத்தங்களை கொண்டும் முடிவு செய்யப்படுகிறது.

அடிக்கடி பிரேக் பிடித்துக் கொண்டே இருந்தால் எரிபொருள் தேவை அதிகரிக்கும் மைலேஜ் குறையும். சூப்பர் பாஸ்ட் ரயில்கள் ஒரு லிட்டர் டீசலில் 230 மீட்டர் தூரம் வரையிலும் பாசன்ஜர் ரயில்கள் 180- 200 மீட்டர் வரையிலும் செல்லும். ஒரு டீசல் என்ஜினின் மைலேஜ் ஒரு மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+