நாதக 100%, வாசன் 100%, பாமக 60%, டிடிவி 50%, பாஜக 48%! வேற ஒன்னும் இல்ல! டெபாசிட் இழப்புதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தவிர கிட்டத்தட்ட மற்ற எல்லா கட்சிகளும் கிட்டத்தட்ட டெபாசிட் இழந்து உள்ளது.

2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 40லும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

இதில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தவிர மற்ற எல்லா கட்சிகளும் கிட்டத்தட்ட இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது. அதிலும் முதல்முறையாக ஒரு தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது. தமிழ்நாட்டில் கட்சிகள் டெபாசிட் இழந்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

1. அதிமுக போட்டியிட்ட இடங்கள் 34. இதில் டெபாசிட் இழந்தது 7. மொத்தமாக 20 சதவிகிதம் டெபாசிட் இழந்துள்ளது.

2. அமமுக போட்டியிட்ட இடங்கள் 2. டெபாசிட் இழந்தது 1. மொத்தமாக டெபாசிட் இழந்தது 50 சதவிகிதம்.

3. பாஜக போட்டியிட்ட இடங்கள் 23. இதில் டெபாசிட் இழந்தது 11. மொத்தமாக 48 சதவிகிதம் டெபாசிட் இழந்துள்ளது.

4. பாமக போட்டியிட்ட இடங்கள் 10. இதில் டெபாசிட் இழந்தது 6. மொத்தமாக 60 சதவிகிதம் டெபாசிட் இழந்துள்ளது.

5. நாம் தமிழர் போட்டியிட்ட இடங்கள் 39. இதில் டெபாசிட் இழந்தது 39. மொத்தமாக 100 சதவிகிதம் டெபாசிட் இழந்துள்ளது.

6. தேமுதிக போட்டியிட்ட இடங்கள் 5. இதில் டெபாசிட் இழந்தது 2. மொத்தமாக 40 சதவிகிதம் டெபாசிட் இழந்துள்ளது.

7. தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 3. இதில் டெபாசிட் இழந்தது 3. மொத்தமாக 100 சதவிகிதம் டெபாசிட் இழந்துள்ளது.

அதிமுக தொடர் தோல்வி: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.

இப்போது லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததால் அது அதிமுகவின் 10வது தொடர் தோல்வியாக அமைந்து உள்ளது.

திமுக வெற்றி ரெக்கார்ட்: கடந்த முறை தமிழ்நாடு - புதுவை சேர்ந்து 39 இடங்களில் வென்றது திமுக. இந்த முறை 40 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா செய்யாத இரட்டை கிளீன் ஸ்வீப் சாதனையை செய்துள்ளார். இவர்கள் யாரும் இரண்டு லோக்சபா தேர்தலில் அடுத்தடுத்து 39 இடங்கள் அதற்கு மேல் வென்றது இல்லை. அந்த சாதனையை திமுக ஸ்டாலினுக்கு கீழ் முதல்முறை படைத்துள்ளது.

இதுவரை வந்த முடிவுகள்;

(1951) மொத்த இடங்கள் 75 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி

(1957) மொத்த இடங்கள் 41 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி

(1962) மொத்த இடங்கள் 41 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி

(1967) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 25 இடங்களில் வெற்றி

(1971) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 23 இடங்களில் வெற்றி

(1977) மொத்த இடங்கள் 39 களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17 இடங்களில் வெற்றி

(1980) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி

(1984) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 25 இடங்களில் வெற்றி

(1989) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி

(1991) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி

(1996) மொத்த இடங்கள் 39 களில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 20 இடங்களில் வெற்றி

(1998) மொத்த இடங்கள் 39 களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 18 இடங்களில் வெற்றி

(1999) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 12 இடங்களில் வெற்றி

(2004) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 16 இடங்களில் வெற்றி

(2009) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்ற கழகம் 18 இடங்களில் வெற்றி

(2014) மொத்த இடங்கள் 39 களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 இடங்களில் வெற்றி

(2019) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்ற கழகம் 24 இடங்களில் வெற்றி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+