சின்ன வெங்காயத்தை விடுங்க.. சென்னை கோயம்பேட்டில் உருளைக்கிழங்கு 1 கிலோ எவ்வளவு தெரியுமா? இதுவுமா?
சென்னை: தக்காளி விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், தற்போது மெல்ல குறைந்து வருகிறது.. ஆனால், உருளைக்கிழங்கு விலை வேகமாக எகிறி வருகிறதாம். இதற்கு என்ன காரணம்?
தக்காளி விலையில் கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கமாகவே இருந்தது.. இதில் கடந்த 4 நாட்களாகவே விலை குறைந்து வருகிறது.. கடந்த இரு மாதங்களாக தக்காளி வரத்து குறைவாக இருந்ததால், விலையும் உயர்ந்திருந்தது..

தக்காளி: தற்போது வரத்து அதிகரித்திருப்பதால், விலை குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகளும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இதில், சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை, 4 நாட்களுக்கு முன்பு 32 ரூபாய்க்கு விற்கப்பட்டது.. பிறகு 35 ரூபாய்க்கு விலை எகிறி காணப்பட்டது. அதேபோல, உருளைக்கிழங்கு கிலோ ரூபாய் 30-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், திடீரென இதன் விலை அதிகரிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது..
உருளைகிழங்கு: நாடு முழுவதும், தக்காளி, வெங்காயத்தை போலவே, இல்லத்தரசிகளால் தவிர்க்க முடியாதது உருளைக்கிழங்காகும்.. வருடந்தோறும் இந்தியாவில் 4.40 கோடி டன் உருளை கிழங்கு உற்பத்தியாகிறது. அந்தவகையில், சீனாவிற்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது...
உத்தரப்பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி அதிகமாக நடக்கிறது. மத்தியப்பிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, அசாம் போன்ற மாநிலங்களில் உருளை விளைகிறது.. நம்முடைய தமிழ்நாட்டிலும் உருளைக்கிழங்கு விளைச்சலில் மிகப்பெரிய பங்கு உள்ளதை மறுக்க முடியாது.
நோ ஸ்டாக்: இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி குறைந்துவிட்டதாம்.. கடுமையான மழை காரணமாக, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது... அதனால், கையிருப்பில் உள்ள உருளை மட்டுமே சந்தைக்கு வருகின்றன. அதிலும் 2ம், 3ம் தர உருளைக்கிழங்குகள் மட்டுமே சந்தைக்கு வருகிறதாம். முதல் தரமான உருளைக்கிழங்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுவிடுகின்றன.
இதனால் நமக்கு இங்கே தேவை அதிகமாக உள்ளது.. ஆனால், கையிருப்பில் உருளை இல்லை என்பதால், விலை உயர்ந்து வருவாக சொல்கிறார்கள்.. சென்னை கோயம்பேட்டை எடுத்து கொண்டால், கடந்த ஜுன் மாதம் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு, இப்போது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது... சில்லரை விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
எப்போது குறையும்: புதிதாக உருளைக்கிழங்கு நடவு பணி ஆரம்பமாகியிருக்கிறதாம்.. எப்போதுமே உருளை விளைந்து, அறுவடைக்கு வருவதற்கு 75 முதல், 120 நாட்களாகும்.. அதனால், உருளை விலை குறைய இன்னும் சில மாதங்களாகலாம் என்கிறார்கள் வியாபாரிகள்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications