சென்னை கோயம்பேடுக்கு 27 லாரிகளில் வந்த தக்காளி.. ஒரு கிலோ எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை தெரியுமா?
சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ 140 க்கு விற்பனையாகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் முதல் தக்காளியின் விலை ரூ 100 தாண்டி ரூ 200 வரை கூட தொட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசு திட்டமிட்டது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 300 ரேஷன் கடைகளில் கிலோ தக்காளி ரூ 60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தக்காளியின் விலை ரூ 170 , ரூ 190 வரை போன நிலையில் நேற்று முன் தினம் அமைச்சர் பெரியகருப்பன் நடத்திய ஆலோசனையில் கூடுதலாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றார்.
அதன்படி நேற்று முதல் மேலும் 200 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தமிழகத்தில் மொத்தம் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் தக்காளியின் விலை கிலோ ரூ 140 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை கோயம்பேட்டில் தக்காளியின் விலை மாற்றமில்லாமல் அதே ரூ 140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 13 கிலோ தக்காளி கொண்ட பெட்டி மொத்த விற்பனையில் ரூ 1900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தினம் 27 லாரிகளில் தக்காளிகள் கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்பட்டன.












Click it and Unblock the Notifications