அதிசயம்தான்! சர்ரென குறைந்த தங்கம் விலை! பெண்கள் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப்! சென்னையில் விலை என்ன?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 6400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் ஒரு சவரன் என்ன விலைக்கு விற்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடந்த மாதம் 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம் உள்ளிட்டவைகளின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. தொடர்ந்து 4 தினங்களாக விலையில் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் 5 ஆவது நாள் 140 ரூபாய் அதிகரித்தது.

இதையடுத்து கடந்த திங்கள்கிழமை அதே 140 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 51,680க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6460-க்கு விற்பனையானது.
அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 91 க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 51,600க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து கிராம் ஒன்று ரூ. 6450 - க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 90க்கும் ஒரு கிலோ ரூ 90 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
நேற்றைய தினம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மார்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. நேற்றைய தினம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து கிராம் ரூ 6470க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் நேற்றைய தினம் 51,760 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன் தங்கம் 51, 200 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 6400 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 87 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 87 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications