முதல்முறையாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. சென்னை விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ரூ 45,520 க்கு விற்பனையாகிறது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண் மீது போடும் காசும் பொன் மீது போடும் காசும் என்றைக்கும் மோசம் போனதாக சரித்திரம் இல்லை என்பார்கள். அதனால்தான் மக்கள் தங்கள் முதலீடுகளை நிலம் வாங்குவதிலும் தங்கம் வாங்குவதிலும் செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட தங்கமும், ரியல் எஸ்டேட்டும் இன்று எங்கோ உயர்ந்துவிட்டன. இந்த நிலையில் 90 களில் சவரன் விலை 2000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து இன்றைய தினம் ஒரு குண்டு மணியை கூட அந்த விலைக்கு வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது.

விலை உயர்வு

விலை உயர்வு

தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ 200 குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் நேற்றைய தினம் ரூ 520 உயர்ந்தது. இதையடுத்து இன்றைய தினமும் தங்கம் விலை புதிய உச்சத்தையே தொட்டுள்ளது. இன்று ஒரு சவரனுக்கு ரூ 720 அதிகரித்துள்ளது.

கிராம் விலை

கிராம் விலை

அதன்படி சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 5,690 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 45,520 க்கு விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ 2.90 உயர்ந்து ரூ 80.70க்கு விற்பனையாகிறது. கடன் வட்டி விகிதங்கள் கால் சதவீதம் உயரக் கூடும் என வெளியிட்டதன் எதிரொலியால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அட்சய திருதியை

அட்சய திருதியை

இந்த மாதம் 22 ஆம் தேதி அட்சய திருதியை. இந்த நன்னாளில் நாம் எந்த பொருளை வாங்கினாலும் அடுத்த ஆண்டு வரை அந்த பொருள் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பார்கள். இதனால் மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய கருதுவார்கள். அன்றைய தினம் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும். காலையில் போனால் இரவுதான் வீடு திரும்ப முடியும்.

தங்கம் விலை

தங்கம் விலை

ஆனால் அன்றைய தினம் தங்கம் மட்டும்தான் வாங்க வேண்டும் என்றில்லை. எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கலாம் என்கிறார்கள். எனவே அட்சய திருதியைக்காக தங்கம் வாங்க மக்கள் காத்திருக்கும் நிலையில் அதன் விலை இப்படி விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே செல்வது நடுத்தர மக்களை கவலைக்குள்ளாகியுள்ளது. அது போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+