இதென்ன புதுசா இருக்கே! விஜயலட்சுமியும் நடிகை ஜெயபிரதாவும் உறவினர்களாமே.. எப்படி தெரியுமா?
சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கும் தெலுங்கு நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயபிரதாவுக்கும் இப்படி ஒரு உறவு இருக்கிறது உங்களுக்கு தெரியுமா?
பெங்களூருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருடைய தந்தை சண்முகசுந்தரம். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாய் விஜயா இலங்கையை சேர்ந்தவர்.''

தந்தை பெங்களூரில் பொறியாளராக வேலை பார்த்தார். விஜயலட்சுமிக்கு பள்ளி படிப்பெல்லாம் பெங்களூரில்தான். ஆனால் அவருடைய தாய்மொழி தமிழ்தான். இவர் பிறந்ததும் சென்னைதானாம். விஜயலட்சுமி 1997 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.
இவர் இதுவரை 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 25 படங்கள் கன்னட படங்களாகும். இவர் பிரகாஷ் ராஜுடன் நடித்த நாகமண்டலா என்ற படம்தான் விஜயலட்சுமிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. நடிகர் விஜய், சூர்யாவுடன் பிரென்ட்ஸ் படத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து கலகலப்பு, ராமசந்திரா, மிலிட்டரி, சூரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் 2010ஆம் ஆண்டு வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷன் சீரியலிலும் நடித்துள்ளார். விஜயலட்சுமி சென்னையில் வசித்து வந்தார். சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னுடன் சில காலம் வாழ்ந்துவிட்டு பிறகு தன்னை ஏற்க மறுக்கிறார் என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். சீமான் தன்னை ஏமாற்றியதாக கடந்த 2020ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அப்போதும் நிறைய மாத்திரைகளை போட்டு தற்கொலை முயற்சி செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் சீமான் மீது குற்றம்சாட்டுவதால் அவருடைய கட்சியினர் விஜயலட்சுமியை அவதூறாக பேசுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமான் மீது விஜயலட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு சீமான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சீமானிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் இன்னும் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் விஜயலட்சுமியும் ஜெயபிரதாவும் உறவினர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது விஜயலட்சுமிக்கு உஷா தேவி என்ற மூத்த சகோதரி இருக்கிறார். இவருடைய கணவர், ஜெயப்பிரதாவின் சகோதரர் ராஜ்பாபு ஆவார். அதாவது ஜெயபிரதாவின் சகோதரரைத்தான் விஜயலட்சுமியின் அக்காள் திருமணம் செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications