உங்கள் முகம் வட்டமா, கோளமா? நீங்கள் எப்படிப்பட்டவர்? ஃபேஸை வைத்து குணாதிசயத்தை நாங்கள் சொல்கிறோம்!
சென்னை: உங்கள் முகத்தின் வடிவம் இருக்கே , அது கூட உங்களை பற்றி பிறருக்கு எடுத்துச் சொல்லும், அதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. உங்கள் அகம் மகிழ்ந்தால் முகம் சிவக்கும். அகம் அழுதால் முகம் வாடிக் கிடக்கும். இதுதான் எதார்த்தம்.

அந்த வகையில் முகத்தின் வடிவத்தை வைத்து ஒரு நபரின் குணங்களை தெரிந்து கொள்ளலாம். இது குறித்து நீங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கால் விரல்கள், கை விரல்கள், உட்காரும் பொசிஷன் உள்ளிட்டவைகளை வைத்து அந்த நபரின் குணத்தை அறிய முடியும்.
அது போல் உங்கள் முகத்தின் வடிவம் என்னவோ அதற்கான குணத்தை நாங்கள் சொல்கிறோம். சரியா என நீங்கள் சொல்லுங்கள். பொதுவாக மனித முகம் என்பது வட்டம், நீள் வடிவம், சதுர வடிவம், கோழி முட்டை வடிவம், டயமன்ட் வடிவம் என இருக்கிறது. இதில் பொதுவாக நாம் கவனிப்பது வட்ட, கோள் முகத்தைத்தான்.
அதாவது மனிதனின் முகத்திற்கும் அவருடைய தனிப்பட்ட குணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த கால ஆய்வுகளும் தரவுகளும் சொல்கின்றன. ஆண்களின் முகத்தை விட பெண்களின் முகத்தை பார்த்தாலே அவர்களுடைய தனிப்பட்ட பண்புகளை எளிதாக சொல்லிவிட முடியும்.
நீள் வடிவம்: அந்த வகையில் உங்களுக்கு நீள் வடிவத்தில் முகம் இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் நல்ல சிந்தனையாளர்கள். எனினும் தேவையின்றி அதிகமாக சிந்தனை செய்வீர்கள். நன்றாக திட்டங்களை வகுப்பீர்கள், உங்கள் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ள மாட்டீர்கள். விதிபடி எல்லாம் நடக்கும் என்று சொல்லி எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு உங்கள் பணியை அன்றாடம் செய்வீர்கள்.
வட்ட வடிவம்: உங்கள் முகம் வட்டமாக இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் அனைவரிடத்திலும் விட்டுக் கொடுத்து செல்லும் குணம் கொண்டவர்கள். கருணையுடன் இருப்பீர்கள். இதனால் அனைத்து தரப்பினரிடமும் நன்றாக பழகுவீர்கள். ஆனால் இறுதியில் அந்த நபரிடம் இருந்து நீங்கள் பெற விரும்பியதை பெறவே முடியாது. சுயநலம் கொண்டவர்களை நீங்கள் அதிகம் ஈர்ப்பீர்கள். ஆனால் அவர்களை மாற்றவும் நீங்கள் விரும்புவீர்கள்.
டைமண்ட் வடிவம்: உங்கள் முகம் டயமண்ட் போல் இருக்கிறதா. அப்படியென்றால் நீங்கள் நிறைய விவரங்களை கொண்டிருப்பூர்கள். இதனால் நிறைய தரமான பணிகளை செய்வீர்கள். மிகவும் கட் அன்ட் ரைட்டாக எல்லோருடனும் பேசுவீர்கள். இதுவே சில நேரங்களில் தவறாக முடிந்துவிடும்.
ஓவல் வடிவம்: கன்னங்களை விட தாடைகள் குறுகியதாக இருக்கும். இந்த முக அமைப்பை உடையவர்கள் எப்போதும் சரியாக செய்வீர்கள். எல்லாரையும் வரவேற்று மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.
சதுர வடிவம்: சதுர வடிவத்தில் முகம் கொண்டவர்களா நீங்கள்? உங்களுக்கு சகிப்புதன்மை அதிகமாகவே இருக்கும். இதனால் கடினமான சவால்களை கூட விருப்பத்துடன் ஏற்பீர்கள். அந்த சவால்கள் கோபத்தை ஏற்படுத்தினாலும் கடினமாக உழைப்பீர்கள்.
இதய வடிவம்: இதய வடிவத்தில் முகம் கொண்டவர்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு பலம் இருக்கும். அதே நேரம் பிடிவாத கொண்டவராகவும் இருப்பீர்கள். இந்த முக அமைப்பை கொண்டவர்களுக்கு நிறைய ஆற்றல் இருக்கும். இதனால் எந்த லட்சியத்தையும் அடைவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சிறந்த படைப்பாளிகளாவும் வலிமையான செயல்திறன் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள்.
இப்படியாக மனிதர்களின் முகத்தை வைத்தும் அவர்களுடைய பண்புகளை சொல்லலாம். இது சரியாக இருந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications