இவ்வளவுதாங்க விஜயகாந்த் வாழ்க்கை! ஒற்றை போட்டோவில் ஆதி முதல் அந்தம் வரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார். அவரின் எளிமையான வாழ்க்கை வரலாற்றை இங்கே பார்க்கலாம்.

இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு இன்று அதிகாலை தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. அதிகாலை அவரின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

Do you know the simple life history of DMDK Founder Vijayakanth?

வழக்கமான பாதிப்பு இல்லை: அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்பட்டது. நிமோனியா பாதிப்பு அவருக்கு அதிகம் இருந்த காரணத்தால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

1952 - விஜயகாந்த் என்னும் நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி 1952, ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார்

1979 - எம்.ஏ.காஜா இயக்கி, விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான "இனிக்கும் இளமை" வெளியானது.

1981 - பல்வேறு தோல்விகளுக்கு பிறகு இவர் நடித்த "தூரத்து இடி முழக்கம்" எனும் படம் மாபெரும் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

1984 - தமிழில் ஒரே ஆண்டில் 18 படங்களை வெளியிட்ட நடிகர் என்ற வரலாற்றை படைத்தார்.
1990- 1990 முதல் 1999 வரை, இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நிலையில், அவற்றில் பெரும்பாலானவை அதிரடி திரைப்படங்களாகும்.

2005 - தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை தமிழகத்தில் துவங்கினார்.

2006 - 2006 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011 - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு இவரது கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

2012 - சட்டசபையில் 2012ம் ஆண்டு பேசும் போது ஆளும் கட்சியினர் விமர்சனம் செய்யவே ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி கேள்வி கேட்டார். இதனால் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கு பின் அவர் சட்டசபைக்கு செல்லவில்லை.

2015- இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயகாந்த், 2016 தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது மட்டுமில்லாமல், டிபாஸிட்டையும் பறிகொடுத்தார்.

2015 - தமிழ் திரையுலகில் தனது முத்திரையை பதித்த விஜயகாந்த், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2015ல் தனது மகன் சண்முகபாண்டியன் நடித்த சகாப்தம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

Do you know the simple life history of DMDK Founder Vijayakanth?

2016-2023 - உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

2023 - டிசம்பர் 28 - மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி அதிகாலை மரணம் அடைந்தார்.

விஜயகாந்தின் சாதனைகள்: 1) 2001ல் தமிழக அரசின் கலைமாமணி விருது 2)1989ல் செந்தூரப்பூவே படத்திற்காக சிறந்த நடிகர் விருது. 3)1988ல் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது 4)தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் 5)தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாநில கட்சியை தமிழகத்தில் துவங்கினார் 6)14 ஏப்ரல் 2010ல் கேப்டன் டிவி எனும் 24 மணிநேர தொலைக்காட்சியை துவங்கினார். 7)2011ல் ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்வாகி, தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+