நடிகை ஷாலு ஷம்மு தொலைச்சாங்களே.. அந்த ஐபோனில் இத்தனை சிறப்பம்சங்களா? அதான் இம்புட்டு விலையா?
சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஒரு பார்ட்டியில் திருட்டு போன நிலையில் அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடிகை ஷாலு ஷம்மு தனது நண்பர்களுடன் கடந்த 9ஆம் தேதி பார்ட்டியில் கலந்து கொண்டார். இந்த பார்ட்டி முடிந்ததும் சூளைமேட்டில் உள்ள அவருடைய தோழியின் வீட்டில் தங்கியுள்ளார்.

அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த போது தனது ஐபோனை காணவில்லை. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற போது அங்கும் அவருடைய செல்போன் இல்லை. அவர் வைத்திருந்த போன் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகும். இதன் விலை ரூ 2 லட்சம்.
இந்த திருட்டு சம்பவம் ஒரு புறம் இருக்க, இந்த போனின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்ப்போம். பொதுவாக செல்போன்கள் என்பது 500 முதல் லட்சங்கள் வரை உள்ளன. அதிலும் அம்பானி மனைவி நீடா அம்பானி வைத்துள்ள போனில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அது போல் போனில் இருக்கும் சிறப்பம்சங்களுக்கு ஏற்ப விலை மாறுபடும்.
இந்த ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி விற்பனைக்கு வந்தன. இதன் எடை 240 கிராம் ஆகும். இதன் தடிமன் 7.9 மி.மீ. ஆகும். இதில் பேஜிக் டெக்னாலஜியான ஜிஎஸ்எம் முதல் நவீன 5 ஜி டெக்னாலஜி வரை புகுத்தப்பட்டுள்ளது. இதன் பிரேம் ஸ்டீலில் இருக்கும். நானோ சிம், பல எண்களுடன் கூடிய டூயல் சிம், 6 மீட்டர் ஆழ நீரில் 30 நிமிடங்கள் இருந்தாலும் செல்போனுக்கு ஒன்றும் ஆகாது.

இந்த போனின் டிஸ்பிளே அளவு 6.7 இன்ச், டால்பி விஷன் இருப்பதால் எழுத்துகளும் படங்களும், துல்லியமாக தெரியும். கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத டெக்னிக்கும் இதில் உள்ளது. இந்த போன் கீழே விழுந்தாலும் எதுவும் ஆகாமல் இருக்க செராமிக் ஷீல்டு கிளாஸால் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆபரேட்டிங் சிஸ்டம் 16 முதல் மேம்படுத்தப்பட்ட iOS 16.4.1 வரை உள்ளது. இதன் சிப் ஆப்பிள் ஏ16 பயோனிக் ஆகும்.
இந்த போனில் 128 ஜிபி முதல் 1 டெர்ரா பைட் ரேம் வரை இன்டர்னல் மெமரி உள்ளது. இதில் 3 கேமராக்கள் உள்ளன. அவை 48 மெகா பிக்ஸல் , 12 மெகா பிக்ஸல்களை கொண்டது. செல்ப கேமரா 12 மெகா பிக்ஸல் கொண்டது. வீடியோக்கள் 4 கே டெக்னாலஜியில் எடுக்கலாம். இதில் High Display resolution உள்ளது. இதன் மூலம் படங்களை தெளிவாக பார்க்கலாம். இவை பார்க்கும் போது நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை தரும்.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளதால் போனில் இருந்து வெளியாகும் அவுட்புட் திறன் நன்றாகவே இருக்கும். இதில் ஜிபிஎஸ் உள்ளது. ஆபத்து காலங்களில் செயற்கைகோளுடன் இணைக்கும் வசதியையும் கொண்டுள்ளது. வேகமாக போன் இயங்குவதற்கு பயோனிக் தொழில்நுட்பம் உதவுகிறது. இதில் உள்ள சிப்கள் அதி நவீன தொழில்நுட்பத்தை சேர்ந்தது என்பதால் இதன் விலை லட்சங்களை கொண்டுள்ளது. மற்ற ஐபோன்கள் பயன்படுத்தாத நேரங்களில் கூட ஆன் மோடிலேயே இருக்கும். ஆனால் இந்த ப்ரோ மாக்ஸ் ஐபோன்கள் பயன்படுத்தாத நேரத்தில் ஆப் மோடிற்கு செல்லும். இதனால் பேட்டரி எளிதில் காலியாகாது.
ஒரு முறை சார்ஜ் போட்டால் சராசரியாக 13 மணி நேரம் 39 நிமிடங்கள் வரை வரும் இந்த போன்கள் அடர் ஊதா நிறத்தில் கிடைக்கிறது. ஸ்பேஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் உள்ளன. இதன் விலை ஒன்றரை லட்சம் முதல் உள்ளன. இந்த போனை மினி லேப்டாப் அல்லது டேப்லெட் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். டூப்ளிகேட் போட்டோக்களை டெலிட் செய்யும் வசதி உள்ளது. பாதுகாப்பு வசதிகளுக்காகவே ஆன்ட்ராய்டுகளை விட ஐபோன்களை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இந்த போனை ஹேக் செய்வது மிகவும் கடினம்.












Click it and Unblock the Notifications