Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம டஃப் கொடுத்த விஜய பிரபாகரன்! முட்டி மோதிய சவுமியா! டக்கர் ஓபிஎஸ்! ஸ்டார் தொகுதிகளின் நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருதுநகரில் விஜயபிரபாகரன், தருமபுரியில் சவுமியா அன்புமணி, ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தோல்வி அடைந்தாலும் கடுமையான போட்டி போட்டனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress 2024

திமுக கூட்டணி சார்பில் திமுக 22 இடங்களிலும் (கொமதேக -1) காங்கிரஸ் 9 இடங்களிலும் சிபிஐ, சிபிஎம், விசிக தலா இரு இடங்களிலும் மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டது.

அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக 33 இடங்களிலும் புதிய தமிழகம் 1 இடத்தில் (இரட்டை இலை சின்னத்தில்), தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிட்டது.

பாஜக கூட்டணி சார்பில் பாஜக 19 தொகுதிகளிலும் ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், சிவநேசன், பாரிவேந்தர் ஆகியோரின் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. பாமக 10 இடங்களிலும் தமாகா 3 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும் சுயேச்சையாக ஓபிஎஸ் ஒரு இடத்திலும் போட்டியிட்டார்.

தமிழகத்தில் நட்சத்திர தொகுதிகள் 12 உள்ளன. அவற்றில் தென் சென்னை, சிதம்பரம், வேலூர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, தருமபுரி, தென்காசி, விருதுநகர், நீலகிரி ஆகிய தொகுதிகள் பார்க்கப்படுகின்றன.

தென் சென்னை: திமுக சார்பில் தமிழச்சி தங்க பாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் ஆகியோர் மீண்டும் போட்டியிட்டனர். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் வேட்பாளராக களம் கண்டார். தமிழச்சி 2,24,127 வாக்குகளையும் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் 1,47,273 வாக்குகளையும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயவர்தன் 71802 வாக்குகளையும் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

சிதம்பரம் : இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, அதிமுக சார்பில் சந்திரஹாசன் போட்டியிட்டனர். திருமாவளவன் 4,51,178 வாக்குகளையும் சந்திரஹாசன் 3,40,464 வாக்குகளையும், கார்த்தியாயினி 1,43,656 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வேலூர் : திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 4,61,215 வாக்குகளையும் பாஜக சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 2,80,220 வாக்குகளையும் அதிமுக சார்பில் பசுபதி 90,703 வாக்குகளையும் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்கள்.

ராமநாதபுரம்: திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஐயூஎம்எல் நவாஸ் கனி 4,25,102 வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளர் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர் செல்வம் 2,94,345 வாக்குகளையும் அதிமுக சார்பில் ஜெயபெருமாள் 87,314 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தேனி: தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 4,38,287 வாக்குகளையும் அமமுக சார்பில் டிடிவி தினகரன் 2,15,043 வாக்குகளையும் அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமி 1,21,604 வாக்குகளையும் பெற்றார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி 5,17,575 வாக்குகளையும் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி 1,42,464 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் ரவீனா ருத் ஜனே 1,16,496 வாக்குகளையும் , தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன் 1,15,170 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் 4,39,716 வாக்குகளையும் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் 2,86,985 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி சார்பில் மரியா ஜெனீபர் 40,792 வாக்குகளையும் , அஇஅதிமுக சார்பில் பசிலியன் நசரத் 32285 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கோவை: கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் 3,55,275 வாக்குளையும் ,பாஜக சார்பில் அண்ணாமலை 2,83,325 வாக்குகளையும் அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன் 1,45,634 வாக்குகளையும் பெற்றனர்.

தருமபுரி: தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் மணி 4,21,391 வாக்குகளையும், பாமக சார்பில் சவுமியா அன்புமணி 4,00616 வாக்குகளையும், அதிமுக சார்பில் ஆர்.அசோகன் 2,83,054 வாக்குகளையும் பெற்றனர்.

தென்காசி: திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 4,09,123 வாக்குகளையும்புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 2,20,239 வாக்குகளையும் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் 1,99,323 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

நீலகிரி: திமுக சார்பில் ஆ.ராசா 4,70,430 வாக்குகளையும் பாஜக சார்பில் எல் முருகன் 2,31,378 வாக்குகளையும் அஇஅதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச் செல்வன் 2,18,634 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

விருதுநகர்: காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,52,454 வாக்குகளையும் தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,44,908 வாக்குகளையும் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 1,51,800 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+