Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமேல் ஜென் இசட் கிடையாது! நாளை முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பெயர்! கேட்டா ஆடிப்போய்டுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை முதல்.. அதாவது 2025ம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பெயர் வைக்கப்படும். அதாவது நாளை முதல் பிறக்கும் குழந்தைகளின் ஜெனரேஷனுக்கு புதிய பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் புதிய பெயர் வைக்கப்படும்.

new year

முதல் கால கட்டம்- 1928-1945
இரண்டாம் கால கட்டம்: 1946-1964
மூன்றாம் கால கட்டம்: 1965-1980
நான்காம் கால கட்டம்-: 1981-1996
ஐந்தாம் கால கட்டம்: 1997-2009
6ம் கால கட்டம்-: 2010-2024

அடுத்து வரும் கால கட்டம்-: 2025- 2039 வரை

இப்போது இருக்கும் கால கட்டம் 6வது காலகட்டம். அது இன்றோடு முடிகிறது. நாளையோடு அடுத்த காலகட்டம் உருவாகிறது. இதற்கெல்லாம் தனி தனியாக பெயர் உள்ளது. உதாரணமாக

சைலன்ட் ஜெனரேஷன்: 1928-1945
பேபி பூமர்ஸ்: 1946-1964
ஜென் X : 1965-1980
மில்லினியல்கள்: 1981-1996
ஜென் Z: 1997-2009
ஜென் ஆல்பா: 2010-2024
ஜென் பீட்டா: 2025-2039 வரை

அதாவது இப்போது இருப்பது ஜென் ஆல்பா. இவர்கள் 2010ல் பிறந்த குழந்தைகள். இன்று வரை பிறக்கும் குழந்தைகள் இந்த லிஸ்டில் சேர்க்கப்படுவார்கள்.

90ஸ் கிட்ஸ் என்று அழைக்கப்படுபவர்கள் இரண்டு லிஸ்டில் வருவார்கள். அதாவது மில்லினியல்கள்: 1981-1996 மற்றும் ஜென் Z: 1997-2009. இவர்கள் இருவரும் 1990க்கு பின் பிறந்தவர்கள்.

இப்போது இளைஞர்களாக இருக்கும் பலர் ஜென் z அல்லது ஜென் ஆல்பா தலைமுறையை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் காலம் எல்லாம் இதோடு முடிகிறது. இனி ஜென் பீட்டா. 2025ம் ஆண்டில்.. அதாவது நாளை முதல் பிறக்கும் குழந்தைகள் ஜென் பீட்டா தலைமுறையை பிறந்தவர்கள்.

2025 மற்றும் 2039 க்கு இடையில் பிறந்த குழந்தைகளை உள்ளடக்கிய குழு.. அதாவது ஜென் பீட்டா குழு 2035 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 16 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பலர் 22 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தை காண வாய்ப்புள்ளது. அதாவது 2100ம் ஆண்டை காண வாய்ப்புகள் உள்ளன. அடுத்த நூற்றாண்டை காண வாய்ப்புள்ள தலைமுறையாக.. பெரும்பாலும் ஒரே தலைமுறையாக இவர்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

இவர்கள் ஜென் பீட்டா என்று மட்டும் அழைக்கப்படாமல் .. 'பீட்டா பேபி' என்று அழைக்கப்படுவார்கள். பெரும்பாலும் இவர்கள் ஏஐ யுகத்தில் வாழ்வார்கள். ஏஐ பயன்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.. இப்போது இருக்கும் பெரும்பாலான தொழில்நுட்பம் இவர்கள் டீன் ஏஜ்ஜாக இருக்கும் காலத்தில் மறைந்து போக வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் காலத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் இருக்கும். பெரும்பாலும் எல்லாமும் ஏஐ மயமாக மாறி இருக்கும்.

இவர்கள் போன் பயன்படுத்தும் முறை பெரும்பாலும் மாறும்.. விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் இவர்கள் காலத்தில் அதிகம் இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது 90ஸ் கிட்ஸ்களாக இருக்கும் பலர் அடுத்த 15- 20 வருடங்களில் பீட்டா பேபிகளிடம் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+