பெகட்ரான், ஹூண்டாய், வின்பாஸ்ட், டாடா! தமிழ்நாடு நம்பர் 1.. குவியும் டாப் நிறுவனங்கள்! கவனிச்சீங்களா
சென்னை: தமிழ்நாட்டில் பெகட்ரான், ஹூண்டாய், வின்பாஸ்ட், டாடா போன்ற சர்வதேச நிறுவனங்கள் அடுத்தடுத்து முதலீடுகளை செய்ய தொடங்கி உள்ளன.
கடந்த சில மாதங்கள் முன் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன.

டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு
பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு
TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு
கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு
Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
இதில் கவனிக்கப்பட்ட 4 முதலீடுகள்
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
இந்த முதலீடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கி உள்ளன. புதிய சில முதலீடுகள் பற்றிய அறிவிப்புகளும் வர தொடங்கி விட்டன.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகம் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் முதலீடுகள் பெருகி வருகின்றன. மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக தென் மாவட்டங்களில், மேற்கு மாவட்டங்களில் முதலீடுகள் அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டிலேயே கிராக்ஸ் உள்ளிட்ட காலணிகளை தயாரிக்கும் விதமாக முக்கியமான தொழிற்சாலை தொடங்கப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் தொழிற் புரட்சி: இத்தொழிற்சாலையை அமைக்க 28.11.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள் அதன் பின்னர், மிகச் சரியாக ஓர் ஆண்டு காலத்தில் இத்தொழிற்சாலை நிறுவப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் தமிழ்நாடு பல பொருளாதாரக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இப்பெருமை நிலைபெறவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முன்னேற்றம்: காலணிகளைப் பொறுத்தவரை, உலக அளவில் தோல் அல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு வீரர்களின் காலணிகளுக்கான நுகர்வும் அதிக அளவில் உள்ளன. மேலும், இத்துறையில் அதிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளும், ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளும் மிகப்பெரிய உள்ளன. இவை மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் இத்துறை திகழ்கிறது.
இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதில் பெரும் அளவில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், 23.8.2022 அன்று "தமிழ்நாடு காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை-2022" தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மூலம் வெளியிடப்பட்டது.
சிப்காட் நிறுவனம்: "அனைவரையும் உள்ளடக்கிய பரவலான மற்றும் நிலையான வளர்ச்சி" என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் சிப்காட் நிறுவனம் மூலமாக ஒரு தொழிற் பூங்காவை அமைத்துள்ளது. இப்பூங்காவில் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதன் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும்.இந்நிறுவனம், 2028-ஆம் ஆண்டிற்குள் 2,440 கோடி ரூபாய் முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்திடவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
முதலீட்டாளர்கள் மாநாடு: சென்னையில் அடுத்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. ஜனவரியில் மிகப்பெரிய அளவில் இந்த மாநாடு நடக்க உள்ளது. பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பிரம்மாண்ட மாநாடு நடக்க உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 வருடமாக முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக ஐடி துறையில் சுணங்கி இருந்த தமிழ்நாடு வேகமாக பல்வேறு முதலீடுகளை பெற்று வருகின்றன. அதேபோல் தொழிற்துறையிலும் பல அதிரடி சாதனைகளை தமிழ்நாடு அரசு நிகழ்த்தி வருகிறது.
ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் மிகப்பெரிய முதலீட்டை கடந்த மாதம் உறுதி செய்த டாடா நிறுவனம் அமைய போகும் புதிய தொழிற்சாலையில் Jaguar மற்றும் Land Rover Car களை உற்பத்தி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனமும் சென்னைக்கு பதில் ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளது.
2 மாத இடைவெளியில் தமிழ்நாட்டில் வின்பாஸ்ட் உட்பட இரண்டு பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதை பறைசாற்றும் விதமாக தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. \தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 13.3.2024 முகாம் அலுவலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5.000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலையில் மூன்றில் இரண்டு பங்கு Jaguar மற்றும் Land Rover Car களை உற்பத்தி செய்யவும், மீதமுள்ளவை Tata EVக்காகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த மாதம் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் நடந்து வருகிறது தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் பின்வரும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ACME - 52,000 கோடி
பெட்ரோனாஸ் - 34,000 கோடி
செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள்
லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்
என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.
வின்பாஸ்ட்: சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம்.
டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.
அருகருகே வருகின்றன: தூத்துக்குடியில் திங்கள் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் தொடங்க உள்ளது. இந்த இடத்திற்கு அருகிலேயே தூத்துக்குடி சிப்காட்டில் அமையும் சர்வதேச பர்னிச்சர் பார்க் அமைக்கப்பட உள்ளது.
இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.












Click it and Unblock the Notifications