அதிகாரிகள் இல்லாத போதும்.. ஒழுக்கத்தை கடைபிடித்த.. சென்னை மக்கள்.. ஏர் ஷோவில் நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: நேற்று சென்னையில் மிக சிறப்பாக விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் மரணம், அரசு சரியாக திட்டமிடவில்லை, பாதுகாப்பு பணிகளை செய்யவில்லை என்றெல்லாம் புகார்கள் வைக்கப்படுகின்றன. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சி, புதிய சாதனை படைத்து உள்ளது. விமான கண்காட்சிக்காக அதிக அளவில் கூட்டத்தை ஈர்த்ததற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.
இந்திய விமானப் படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்.. நேற்று நடந்த நிகழ்வில் 12-15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். நேற்று காலை 11 மணிக்கு இந்த விமான சாகச நிகழ்ச்சிகள் தொடங்கியது. இந்த நிலையில், மதியம் 1 மணி வரை இது நடந்தது. சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் விழாவை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.

சோக சம்பவம்: நேற்று நிகழ்வு சிறப்பாக நடந்தாலும்.. அதிர்ச்சி அளிக்கும் விதமாக 5 பேர் மரணம் அடைந்தனர் . நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பைக்கில் திரும்பியபோது ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மயங்கியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சீனிவாசன் பலியாகி உள்ளார். இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில், 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 பேர் இந்த நிகழ்வில் பலியாகி உள்ளனர் .
நெகிழ்ச்சி சம்பவம்: இந்த சோகங்கள், சாதனைகளுக்கு இடையில்.. நெகிழ்ச்சி அளிக்கும் அசத்தலான சில சம்பவங்களுக்கும் நேற்று நடந்தன.
1. போலீசார் பல இடங்களில் இல்லாத போதும் 13 லட்சம் பேர் சாலையில் ஊர்ந்து சென்ற போதும் கூட்ட நெரிசலால் யாரும் நேற்று பலியாகவில்லை. அதாவது மக்கள் ஒருவரை ஒருவர் மிதித்து பிரச்னையை ஏற்படுத்தவில்லை. கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் மரணம் ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமாகவில்லை.
2. இதுவே வடஇந்தியாவில் எங்காவது நடந்து இருந்தால்.. இதெல்லாம் பல மரணங்களுக்கு வித்திட்டு இருக்கும்.
3. நேற்று பெரும்பாலும் மக்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடித்தனர். பல லட்சம் பெண்கள் கலந்து கொண்ட போதும் கூட.. ஒரு சில விஷமிகளை தவிர பெரும்பாலும் பெண்கள் பாதுகாப்பாகவே உணர்ந்தனர். முக்கியமாக இளைஞர்களே பலரும்.. பெண்களுக்கு வசதியாக வழிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர்.
4. முக்கியமாக குழந்தைகளுடன் வந்த பெண்களை , குடும்பங்களை வசதியாக செல்லும் வகையில் இளைஞர்கள் சில இடங்களில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர். போலீசார் செய்ய வேண்டிய பணிகளை இளைஞர்கள் நேற்று செய்து கொடுத்தனர்.
5. பல இடங்களில் ஒருவருக்கு ஒருவர் தண்ணீர் கொடுப்பது.. ஒன்றாக மரத்திற்கு கீழ் அமர்ந்து கொள்ள இடம் கொடுப்பது.. குடைக்கு கீழ் இடம் கொடுப்பது... தெரியாத நபர்களுடன் ஒன்றாக ஆட்டோவில் பயணிப்பது என்று நெகிழ்ச்சியாக செயல்பட்டனர்.
6. நேற்று மக்கள் கூட்டத்தை எதிர்பார்த்து சரியாக 3 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை மெட்ரோ & ஏஜி டிஎம்எஸ் மெட்ரோ இடையே மெட்ரோ ரயில்கள் 3.5 நிமிட இடைவெளியில் மெட்ரோ இயக்கப்பட்டது.
7. இது போக மெட்ரோவில் உள்ளே செல்ல டிக்கெட் யாரிடமும் வாங்கப்படவில்லை. மக்கள் கூட்டத்தைசமாளிக்க .. மக்கள் வரிசையில் நிற்பதை சமாளிக்க டிக்கெட்டை எடுக்க வேண்டாம். ரயிலில் ஏறிய பின் இறங்கும் முன்.. டிக்கெட்டை எடுக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இறங்கிய பின்பும் கூட.. மக்கள் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வெறுமனே பாதுகாவலர்களிடம் காட்டினால் போதும் என்று கூறி மக்களின் கூட்டம் வேகமாக வெளியேற வழி செய்து கொடுக்கப்பட்டனர். மக்கள் பலரும் இதனால் மெட்ரோவின் செயலை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications