2 மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கும் மின் கணக்கீட்டு பணியில் அதிரடி மாற்றம்! மின்சார வாரியம் அசத்தல்
சென்னை: தமிழகத்தில் வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணிகள் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடந்து வரும் நிலையில் தற்போது மின்சார வாரியம் சோதனை முயற்சியில் ஒரு புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
தமிழகத்தில் வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்வது என்பது 2 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த முறை மீட்டரில் உள்ள எண்ணில் இருந்து கடந்த முறை கடைசியாக எடுத்த ரீடிங்கை கழிப்பார்.

அப்போது வரும் எண்தான் நாம் பயன்படுத்திய யூனிட்கள் ஆகும். இதன் அடிப்படையிலேயே கட்டணங்களை விதிப்பார். இது போல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் கணக்கீட்டாளர்களுக்கு எச்.எச்.சி. எனும் கையடக்க கணினி கொடுக்கப்பட்டுள்ளது.
இது போல் கணக்கிடும் யூனிட்டை நுகர்வோரின் மின் கட்டண அட்டையில் குறித்துவிட்டு செல்வார். அதை வைத்து நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை மின்வாரிய அலுவலகத்தில் போய் தெரிந்து கொண்டு பணம் செலுத்திவிடலாம். இல்லாவிட்டால் ஆன்லைனில் நமது சர்வீஸ் எண்ணை கொடுத்து யூசர் நேம், பாஸ்வேர்டு போட்டு ஓபன் செய்தாலே அதில் கணக்கிட்டு வைத்திருக்கும் தொகை நாம் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் மின் பயன்பாட்டு கணக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்கவும் நுகர்வோர்களுக்கு மின் கட்டண விவரத்தை உடனே தெரிவிக்கும் நோக்கிலும் மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு பணியை செல்போன் செயலி மூலம் மேற்கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி பிரத்யேக ஆப் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து வீடுகளில் மின் அளவீடு பணியை செய்து வருகிறார்கள்.
புளூடூத் கருவி மூலம் மீட்டர் கருவி மற்றும் செல்போன் இடையே இணைப்பை ஏற்படுத்தும். அதிலுள்ள அளவுகளை வைத்து ஒவ்வொரு வீடுகளின் மின் பயன்பாடுகளும் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த புதிய முறை காரணமாக மின் பயன்பாடு யூனிட் அளவீடுகளில் எந்தவித முறைகேடுகளும் குளறுபடிகளும் நடைபெறாது என மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தற்போது மின் கட்டணத்தை அறியவும் செலுத்தவும் வாட்ஸ் ஆப் செயலியில் மின்சார வாரியம் அனுப்பி வருகிறது. இதை வைத்து மின் கட்டணத்தை செலுத்த முடியும். அது போல் மின் கட்டணம் ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் என்றால் அதை பணமாக பெறாமல் டிஜிட்டல் முறை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டணங்கள் தற்போது டிஜிட்டல் முறையிலும் செயலி வடிவிலும் வந்துவிட்ட நிலையில் மின் கட்டணமும் வந்துவிட்டது. என்ன ஒரு சிறிய குறை மாதந்தோறு் மின் கணக்கெடுப்பு பணியை நடத்தினால் பல பயனாளிகளுக்கு உதவியாக இருக்கும். இது நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications