சென்னையில் "இந்த" பகுதியில் வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் இன்று இயங்காது! ஏன் என்னாச்சு
சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக எந்த பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று எந்தெந்த இடங்களில் மின் தடை ஏற்படும் என்பது குறித்து மின்வாரியம் தகவல்களை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இது போன்ற மின் பராமரிப்பிற்காக மின்சாரம் துண்டிக்கப்படும் போது மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும்.

இதனால் முன் கூட்டியே மின் துண்டிப்பு பகுதிகளை சொல்லிவிட்டால் அந்த பகுதி மக்கள் மின் சாதனங்களை குறித்த நேரத்திற்குள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால் மின்தடை குறித்த தகவல்கள் மின்சார வாரியம் மூலம் முன் கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த முறை தாம்பரமும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் தடை செய்யப்படுகிறது.
தாம்பரம்: கடபேரி ராதா நகர், நேரு நகர், குமரன் குன்றம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, நாகப்பா நகர், நாகல்கேணி, MEPZ,லட்சுமிபுரம் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதன பயன்பாட்டை மேற்கண்ட குறிப்பிட்ட நேரத்தில் இல்லாமல் முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ பயன்படுத்திக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications