தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் தாசில்தாருக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் மிகப்பெரியது. எளிய மக்களுக்காக சேவை செய்யும் தாசில்தாரை தேடி நாள்தோறும் எண்ணற்ற மக்கள் வருவார்கள். ரேஷன் கார்டு தொடங்கி பட்டா வரை இங்கு தான் மக்கள் வருகிறார்கள். தாசில்தார் என்பவர் பல்வேறு கிராமங்களுக்கு முக்கியமான தலைவராக இருக்கிறார். இது வருவாய்த் துறையில் மிக முக்கியமான ஒரு பதவி. ஒரு வட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, வருவாய் வசூல் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இவரே முதன்மைப் பொறுப்பாளராக உள்ளார். இவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும் அதிகாரம் என்ன என்பதை பார்ப்போம்.
குரூப் 2 தேர்வு எழுதி தாசில்தார் ஆனவர்களுக்கு அரசு எவ்வளவு சம்பளம் வழங்குகிறது தெரியுமா? சாமானிய மக்களால் அந்த சம்பளத்தை எல்லாம் ஒரு நாளும் நினைத்தே பார்க்க முடியாது. இவர்கள் சம்பளம் பற்றி இந்த பதிவில் முதலில் பார்ப்போம். தமிழக அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழுவின்படி (7th Pay Commission), தாசில்தார் பதவிக்கான ஊதிய நிலை பொதுவாக லெவல் 20 ஆகும். இவர்களுக்கு அடிப்படை ஊதியம் சுமார் ₹37,700 முதல் ₹1,19,500 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கைக்கு வரும் தாசில்தார் சம்பளம்
கைக்கு வரும் சம்பளம் எவ்வளவு இருக்கும். அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி , வீட்டு வாடகைப்படி மற்றும் இதர படிகள் சேர்க்கப்பட்டே வழங்கப்படும். பணி மூப்பு மற்றும் பணிபுரியும் இடத்தைப் பொறுத்து, ஒரு தாசில்தாருக்கு மாதத்திற்குத் தொடக்கத்தில் ₹60,000 முதல் ₹75,000 வரை கையில் கிடைக்க வாய்ப்புள்ளது. இது அரசு நிர்ணயிக்கும் இதர படிகளைப் பொறுத்து மாறுபடும்.
சம்பளம் 10 வருடத்தில் எவ்வளவு
சம்பளம் எப்படி மாறுபடும் என்கிறீர்களா. ஒரு தாசில்தார் வேலையில் சேரந்து 10 வருடம் முடிந்த பின்னர் துணை ஆட்சியர் அந்தஸ்திற்கு உயர்ந்துவிடுவார். 27 வயதில் தாசில்தார் ஆனவர். 10வது வருட அனுபவத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? பணியில் சேர்ந்தபோது அடிப்படை ஊதியம் சுமா ரூ. 37,700 ஆக இருக்கும். அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3% அடிப்படை ஊதியம் உயரும். 10 ஆண்டுகளில், அவர் 9 அல்லது 10 முறை ஊதிய உயர்வு பெற்றிருப்பார். அடிப்படை ஊதியம் (10 வருட முடிவில்) தோராயமாக ₹50,000 முதல் ₹54,000 வரை உயர்ந்திருக்கும்.
கையில் கிடைக்கும் சம்பளம்
அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி , வீட்டு வாடகைப்படி மற்றும் இதர படிகள் சேர்க்கப்படும். தற்போதுள்ள நிலவரப்படி: அடிப்படை ஊதியம் ₹52,000, அகவிலைப்படி ₹26,000, வீட்டு வாடகைப்படி மற்றும் இதர படிகள்₹4,000 - ₹6,000 மொத்தம் சுமார் ₹82,000 - ₹85,000 வரை வாங்குவதற்கு வாய்ப்பு அதிகம். அவர் துணை ஆட்சியர் நிலைக்கு உயர்ந்து இருந்தால் மாதாந்திர மொத்த ஊதியம் சுமார் ₹1,20,000 - ₹1,30,000 வரை இருக்கும். கைக்கு வரும் சம்பளம் பிடித்தங்கள் போக சுமார் ₹1,05,000 - ₹1,15,000 வரை இருக்கும்.
தாசில்தாரின் முக்கிய அதிகாரங்கள்
தாசில்தார் என்பவர் ஒரு வட்டாட்சியர் மட்டுமல்ல, அவர் பல பொறுப்புகளை வகித்து வருகிறார். இவருக்கு வருவாய் நிர்வாக அதிகாரம் இருக்கிறது. நிலப் பதிவேடுகளைப் பராமரித்தல், பட்டா மாறுதல் வழங்குதல் மற்றும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகள் உள்ளது. அதேபோல் நில வரி, முத்திரைத்தாள் வரி போன்றவற்றை முறையாக வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டியதும் இவர் தான். அதேபோல் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றைச் சரிபார்த்து வழங்குதல்.
நிர்வாக மற்றும் சட்டம்-ஒழுங்கு
வட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் பணிகளை மேற்பார்வை செய்வார். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளின்போது, வருவாய்த்துறை சார்பில் காவல்துறைக்குத் துணையாகச் செயல்படுதல். கலவரங்கள் அல்லது போராட்டங்களின்போது 'செயல்முறை நிர்வாக அதிகாரம்' இவருக்கு உண்டு. வெள்ளம், புயல், வறட்சி போன்ற காலங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பாதிப்புகளை மதிப்பீடு செய்தல்.
தேர்தல் மற்றும் இதர பணிகள் என்ன
தேர்தலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலராக அல்லது உதவி அலுவலராகப் பணியாற்றி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் வாக்குப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் அவர் பணியாற்றும் வட்டத்தில் நடக்கும் சாவு விசாரணை மற்றும் நிலப் பிரச்னைகள் தொடர்பான விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications