டிரைவிங் லைசென்ஸ் உங்க கிட்ட இருக்கா? வாகனம் ஓட்ட வயது வரம்பு என்ன? இதுக்குதான் ஓட்டுநர் உரிமம் தேவை
சென்னை: டிரைவிங் லைசென்ஸ் ஒருவருக்கு ஏன் அவசியமாகிறது தெரியுமா? கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் என்றால் என்ன? இதற்கான அடிப்படை தகுதிகள் என்னென்ன தெரியுமா?
வாகனங்கள் வைத்திருக்கும் அனைவருமே, கட்டாயம் வைத்திருக்க வேண்டியது டிரைவிங் லைசென்ஸ் உரிமமாகும்.. ஆன்லைனிலேயே வீட்டிலிருந்தபடியே, ஓட்டுநர் உரிமைத் பெற்றுக்கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது.. அதேபோல, லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
ஆவணங்கள்: இந்த டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமானால், சில ஆவணங்கள் குறிப்பாக, பிறந்த தேதி சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை இதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களாகும்.
ஓட்டுநர் உரிமத் தேர்விற்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒருவர், டிரைவிங் லைசென்ஸில் தங்களுடைய பெயரை மாற்ற விரும்பினால், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்டின் நகல், ஒரு தேசிய செய்தித்தாள் அல்லது செய்தித்தாளில் விளம்பரத்தின் நகல், முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி பப்ளிக் மூலம் சான்றளிக்கப்பட்ட வாக்குமூலம் போன்றவை கண்டிப்பாக தேவைப்படும்.
திருத்தங்கள்: அதேபோல, டிரைவிங் லைசென்ஸில் திருத்தங்கள் ஏதாவது இருந்தாலும், ஆதார் அட்டை, 10 அல்லது 12 வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட்டின் நகல், பிறப்புச் சான்றிதழ் போன்றவை தேவையாக இருக்கின்றன..
டிரைவிங் லைசென்ஸை, வாகன உரிமையாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. காரணம், ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சியே இதுஒன்றுதான்..
ஏன் அவசியம்: அதுமட்டுமல்ல, அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் இதுதான்.. ஒருவேளை, ஓட்டுநர், வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும்.. அதனால்தான், வாகன ஓட்டுநர் உரிமம் என்பது அவசியமாக உள்ளது.
அதேபோல, வாகன ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமானால், 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்... ஆனால், இலகு ரக வாகனங்கள் அதாவது, பைக், ஆட்டோ, கார் போன்றவை இலகு ரக வாகனங்களை பயன்படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும்.. இதற்கு குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கனரக வாகனங்கள்: கனரக வாகனம் அதாவது, ஹெவி வெஹிக்கிள்ஸ் எனப்படும் பஸ், லாரி போன்றவைவைகளை ஓட்ட வேண்டுமானால், லைசென்ஸ் பெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்த பிறகே இதற்கு ஓட்ட முடியும். அதேபோல, இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.. ஆனால், வாகன ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமானால், கல்வித் தகுதி எதுவுமே தேவையில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications