பெட்ரோல் பங்க் போறீங்களா? பெட்ரோல் போடறீங்களா? இது என்னன்னு பாருங்க.. இது வண்டி மைலேஜை குறைச்சிடுமாமே
சென்னை: பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும்போது, சில முக்கியமான விஷயங்களையும், வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டியிருக்கிறது.
நாளுக்கு நாள் பெட்ரோல் விலை எகிறி வருகிறது.. பெட்ரோல் விலை ஒருபக்கம் கவலையை தருகிறது என்றால், சில இடங்களில் குறுகிய எரிபொருளை வழங்குவது அதற்கு மேல் அதிருப்தியை தந்துவிடுகிறது. இப்படி குறுகிய எரிபொருளை வழங்குவது ஒரு பொதுவான மோசடி நடைமுறையாகும்... அதனால், கஸ்டமர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொகை: உதாரணத்துக்கு சிலர் ரூ.100க்கு பதிலாக ரூ. 110, ரூ.120 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான அளவுக்கு பெட்ரோல் கிடைப்பதில்லை. ரூ. 100, ரூ. 200க்கு பெட்ரோல் வாங்கும்போது சாஃப்ட்வேர் மூலம் அந்த தொகைக்கான எரிபொருள் மாற்றப்படுகிறது... அந்த வகையில் ரூ. 110, ரூ. 120 க்கு எரிபொருள் நிரப்பினால்தான் அளவு சரியாக இருக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை..
எப்போதுமே பங்கில் பெட்ரோல் போடும்போது, அதில் மீட்டர் "ஜீரோவில்" இருந்து தொடங்குகிறதா என்பதனை முதலில் கவனிக்க வேண்டும்.. பெட்ரோல் பங்கிற்கு செல்வோர் அளவுகளில் குறைபாடு இருப்பதாக சந்தேகம் எழுந்தால், பங்கில் அரசு முத்திரையுடன் கூடிய 5 லிட்டர் குடுவையில் சரி பார்க்கலாம்..
பில்டர் பேப்பர்: ஒருவேளை, தரத்தில் குறைபாடு இருந்தால் பங்கில் உள்ள "பில்டர் பேப்பர்" வைத்து சரிபார்க்கலாம்.. இந்த பில்டர் பேப்ரில் பெட்ரோலை ஊற்றும்போது கறை படியாவிட்டால் தரமான பெட்ரோல் என்றே கருதலாம்.
அதேபோல, ஒவ்வொரு நாளும் விலை மாறுபடுவதால் பெட்ரோல் பங்க் இயந்திரத்தில் பதிவு செய்துள்ள விலையும், அலுவலகத்தின் முன்பு எழுதப்பட்டுள்ள விலையையும் சரிபார்க்க வேண்டும்.
மைலேஜ்: அதுமட்டுமல்ல, தரம் குறைந்த பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்புவது மைலேஜ் அளவை குறைத்து விடும் என்கிறார்கள்.. அதனால்தான், தரத்தை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
அதேபோல, பெட்ரோல், டீசலின் தரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது, "Density" என ஒரு டிஸ்பிளே இருக்கும். இந்த டிஸ்ப்ளேயில் பெட்ரோல் மற்றும் டீசல் அடர்த்தி அளவு காணப்படும்.. இதை வைத்தே, பெட்ரோல், டீசலின் தர மதிப்பீட்டை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் விதிப்படி, பெட்ரோலின் தர மதிப்பீடு 730 முதல் 800 kg per cubic meter வரையில் இருக்க வேண்டும்.. அதேபோல, டீசலுக்கு 830 முதல் 900 kg per cubic meter வரையில் இருக்க வேண்டும். இந்த அளவில் ‛Density' இருந்தால் அது தரமான பெட்ரோல், டீசல் எனலாம். இதன்மூலம் வாகனங்களின் மைலேஜ் அதிகரிக்க செய்யும்.
மதிப்பீடுகள்: சிலசமயம், அதிக வெப்பநிலை காரணமாக இந்த தர மதிப்பீட்டில் சில மாற்றங்கள் வரலாம் என்றாலும், இதற்கு குறைவான தர மதிப்பீடு கொண்ட பெட்ரோல், டீசல் உங்களுக்கு வழங்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நீங்கள் புகார் தரலாம்.
சிலர் குறிப்பிட்ட ஒரே நிறுத்தின் பெட்ரோலை மட்டுமே பயன்படுத்துவார்கள்.. இதுஒருவகையில் சிறந்தது.. ஒரே நிறுவனத்தின் பெட்ரோலுக்கு உங்கள் வாகனம் செட் ஆகிவிட்டால் அதையே தொடர்ந்து செய்யலாம். இதனால் இன்ஜினின் ஆயுள் கூட அதிகமாகும் என்கிறார்கள்..
ஒரே பங்க்: அதேபோல வாகனத்தின் பெட்ரோல் முழுவதும் காலியாகும் வரை பெட்ரோல் போடாமலும் இருக்க வேண்டாம், ரிசர்வ் விழுந்துவிட்டாலோ அல்லது பெட்ரோல் குறைவாக இருக்கிறது என்று உங்களுக்கே தெரிந்தாலோ, உடனடியாக டேங்க்கை நிரப்பி கொள்ள வேண்டும்.
-
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications