கிராம நத்தம் நிலம் உள்ளோருக்கு சூப்பர் வசதி! நத்தம் பட்டாவை ஆன்லைனில் பெற முடியுமா? சபாஷ் தமிழக அரசு
சென்னை: கிராம நத்தம் பட்டா என்பவை யாவை? இந்த நத்தம் பட்டாக்களை ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது தெரியுமா?
கிராம நத்தம் நிலத்தை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது.. அந்தவகையில், ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட அளவு நிலங்கள் நத்தம் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.. இந்த நிலங்கள் ஏழை மக்கள் குடியிருக்கவும், விவசாயம் செய்யவும் ஒதுக்கப்பட்டு வந்தன..

ஏழை மக்கள்: ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் மக்கள் மட்டுமே இதனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, இந்த நிலங்களை விற்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் நிறைந்திருந்தன.. இதனால் நடைமுறை சிக்கல்களும் எழுந்தன.. எனவேதான், நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது...
கிராம நத்தம் நில பட்டாக்கள் என்பவை, புறம்போக்கு நிலங்களாகவே கருதப்படுவதால், அந்த நிலங்களை அனுபவ ஸ்வாதீன இடங்களாக கருதி, பல ஆண்டுகளாக அங்கு மக்கள் வாழும் மக்களுக்கு வழங்க 1991ல் முடிவு செய்யப்பட்டது.. எனவேதான், அந்த பட்டாக்கள் இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தன.
ஆன்லைன் பதிவு: இதற்கு பிறகு, ஆன்லைனில் பதிவு செய்யும் முறை தொடங்கியுளளது.. ஆன்லைனிலேயே நத்தம் பட்டா மாறுதல் செய்ய வசதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்..
இதனால், கிராம நத்தம் மற்றும் நகரப்புற நத்தம் நிலத்தில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள்ஆசை நிறைவேறியிருப்பதுடன், அரசு வழங்கிய பட்டா அடிப்படையில், நில உரிமையை முழுமையாகப் பெற வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம், பட்டா மாறுதல் செய்வது மட்டுமின்றி, உட்பிரிவு செய்வது உட்பட எல்லாவற்றையுமே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
eservices.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அடையாளச் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களுன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு குறைந்த கட்டணமும் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், நத்தம் பட்டாவை எப்படி டவுன்லோடு செய்து கொள்வது தெரியுமா?
- முதலில் https://eservices.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்
- இப்போது, பட்டா / சிட்டா உள்ளிட்ட விவரங்களை பார்வையிட என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்
- பிறகு தோன்றும் புதிய ஸ்கிரீனில், உங்களுடைய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.. குறிப்பாக, உங்களுடைய மாவட்டத்தின் பெயர்,
நீங்கள் இருக்கும் வட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண் அல்லது புல எண் அல்லது நிலத்தின் பெயர், நிலத்தின் வகை, நிலத்தின் புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை சரியாக பதிவிட வேண்டும்.
- அதேபோல, ஊரகமா? நத்தமா? என்ற ஆப்ஷன்களையும் நிரப்ப வேண்டும். அதாவது ஊரகம் என்றால் உங்களுடைய வயல் சார்ந்த இடங்கள் என்று பொருள்.. நத்தம் என்றால் உங்கள் வீடு சார்ந்த நிலங்கள் என்று அர்த்தம்.
- இறுதியில் கேப்சா எண்ணை பதிவிட்டு, "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்தால் போதும். உங்களுடைய நத்தம் நிலத்தின் பட்டாவை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே காணலாம், இதனை டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.
வரவேற்பு: வழக்கமான நிலங்களின் பட்டா விபரங்களை பெறுவது போலவே, நத்தம் நில விபரங்களையும் ஆன்லைனில் பார்க்கவும், டவுன்லோடு செய்து கொள்ளவும் வசதி உள்ளதால், பொதுமக்களின் வரவேற்பு இதற்கு வெகுவாக கிடைத்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications