தொலைந்த ஆதார் கார்டை அன்லாக் செய்யணுமா? ஆதார் நம்பரையே மறந்துட்டீங்களா? கவலையை விடுங்க.. சிம்பிள்
சென்னை: உங்கள் ஆதார் நம்பரை மறந்துட்டீங்களா? எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா? தொலைந்து போன உங்கள் ஆதார் கார்டை லாக் செய்யணுமா? எப்படி லாக் செய்ய வேண்டும் தெரியுமா?
தனியார், மற்றும் அரசு தொடர்பான பல பணிகளுக்காக அடையாள சான்றாக பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணம்தான் இந்த ஆதார் கார்டுகள்.. இந்திய குடிமக்களுக்கான அடையாள அட்டையாகும்

பள்ளியில் சேர வேண்டும் என்றாலோ, அல்லது வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்றாலோ அல்லது அரசுத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றாலோ அல்லது மற்ற வசதிகளை பெற வேண்டும் என்றாலோ, இந்த ஆதார் கார்டுகள் அவசியமாகிவிட்டன..
ஆதார் கார்டுகள்: இப்படிப்பட்ட ஆதார் கார்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது தேவைப்படும்போது உங்களிடம் இல்லாமலோ இருந்தால், அல்லது ஆதார் அட்டை நம்பரை மறந்துவிட்டாலோ சிக்கல் ஏற்படலாம்.
அதேசமயம், ஆதார் அட்டை தொலைந்தால் அல்லது ஆதார் அட்டை நம்பரை மறந்துவிட்டால், சில நிமிடங்களிலேயே ஆன்லைனில் ஆதார் அட்டையை பெற எளிதாக முடியும்.
ஒருவேளை உங்கள் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால், யாராவது தவறாக பயன்படுத்தப்படலாமோ என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். எனவே, முதலில் நம்முடைய ஆதார் கார்டை லாக் செய்துவிட வேண்டும். ஆன்லைனில் எளிதாக லாக் செய்யலாம்.
எப்படி லாக் செய்வது தெரியுமா? உங்களது மொபைல் நம்பரில் இருந்து, GETOTP என டைப் செய்து, அதனை தொடர்ந்து உங்கள் ஆதாரின் கடைசி 4 இலக்க நம்பர்களையும் பதிவிடவும். இதனை 1947 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பிவிட வேண்டும்.
நீங்கள் இந்த எஸ்எம்எஸ்ஸை பதிவு செய்த பிறகு, உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு UIDAIல் இருந்து 6 இலக்க ஓடிபி வரும். இந்த ஓடிபி பெற்றவுடன், நீங்கள் மறுபடியும் உங்களது மொபைலில் இருந்து, LOCKUID இதனை தொடர்ந்து கடைசி 4 இலக்க ஆதார் எண், அதனை தொடர்ந்து நீங்கள் பெற்ற 6 இலக்க ஓடிபியையும் பதிவிட வேண்டும். இப்போது இணையம் மூலமாகவும் உங்கள் ஆதார் கார்டை லாக் செய்யலாம்.
எப்படி மீட்பது: ஒருவேளை, உங்கள் பதிவு எண் (EID) அல்லது ஆதார் (UID) உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், ஆதார்பயன்பாட்டில் அல்லது uidai.gov.in இணையத்தில் சில எளிய வழிமுறைகளை பின்பற்றி தொலைந்த ஆதார் எண்ணை நீங்கள் பெறலாம்.
- முதலில் UIDAI என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டான https://resident.uidai.gov.in/ செல்ல வேண்டும்
- பிறகு அதில் 'Retrieve Lost or Forgotten EID/UID' என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
- இதை கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்துக்கு செல்லும். அந்த பக்கத்தில் "ஆதார் எண்" என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு ஸ்கிரீனில் தோன்றும் பக்கத்தில் உங்களது சுயவிவரங்களான பெயர், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், இ-மெயில் விவரங்களை பதிவிட வேண்டும்
- இதற்கு அடுத்தவாறு கேப்ட்சாவை உள்ளீடு செய்ய வேண்டும்
- பிறகு "Send OTP" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களது ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது இ-மெயிலில் 6 இலக்க OTP நம்பர் தோன்றும்
- இந்த ஓடிபி நம்பரை போர்டலில் டைப் செய்தால் காணாமல் போன ஆதார் அட்டையின் நம்பரை நீங்கள் காணலாம்.
புதுப்பிப்பு: ஒருவேளை, உங்கள் ஆதாரில் உங்கள் செல்போன் நம்பர் பதிவு செய்யப்படவில்லையென்றால், நீங்கள் முதலில், ஆதார் வழங்கும் அல்லது கட்டாய ஆதார் தேவை உள்ள எந்தவொரு ஆன்லைன் சேவையையும் பயன்படுத்துவதற்கு முன்பு அதைப் புதுப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications