ஆதார் கார்டு இருக்கா? அப்டேட் செய்தாச்சா? இன்னும் 30 நாள் கூட இல்லை! ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?
சென்னை: ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதை வீட்டிலிருந்தபடியே எப்படி புதுப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம். ஆதார் மையத்தில் போய் புதுப்பித்தால் ரூ 50 கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆதார் எனப்படும் மத்திய அரசின் அடையாள அட்டையை புதுப்பிக்க ஜூன் 14 ஆம் தேதி கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 14 ஆம் தேதியுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

உங்களிடம் 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டை இருந்தால் அதை இதுவரை ஒரு முறை கூட புதுப்பிக்கவில்லை என்றால் அத்தகைய ஆதார் அட்டைகள் நிச்சயம் புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக ஆதார் சேவை மையத்திற்கு சென்றால் ரூ 50 செலவு செய்ய வேண்டும்.
ஒரு பைசா செலவில்லாமல் எப்படி ஆதார் கார்டை புதுப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம். அதிலும் UIDAI எனும் வெப்சைட்டில் போய் புதுப்பித்தால் இலவசம். அடையாள அட்டையாக பான் கார்டையும் முகவரிக்கு வாக்காளர் அட்டையையும் கொடுக்கலாம்.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் போய் உங்கள் ஆதார் எண்ணுடன் உள்ளே செல்லவும், அப்போது நீங்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதை உள்ளீடு செய்து உள்ளே சென்றால் உங்கள் முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக உள்ளதா என ஒரு முறை சரி பாருங்கள். ஒரு வேளை அதில் உள்ள உங்கள் சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் "என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன " என்பதை கிளிக் செய்யவும்.
ஒரு வேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். அங்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிம்ம, பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். அதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள். உங்கள் அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள்.
அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருத்தல் வேண்டும். முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் 2 மெகா பைட்டைவிட குறைவாக இருத்தல் வேண்டும். அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்த வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இந்திய குடிமக்கள், மக்கள் தொகை குறித்த தகவல், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற இணையதளத்தில் சென்று உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறியலாம். நீங்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்துவிட்டால் அருகில் உள்ள ஆதார் மையம் பற்றிய தகவலை பெறலாம். பின்கோடு மூலம் அருகில் உள்ள ஆதார் மையத்தையும் நீங்கள் அறிய முடியும். அங்கு மேற்சொன்னதை போல் முகவரி சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை நேரில் கொண்டு போய் புதுப்பித்துக் கொள்ளலாம்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications