தாய்மாமனை மணந்தால் தண்டனை.. பொது சிவில் சட்டம் - இந்துத்துவாவின் டெஸ்ட் லேப்.. சொல்றது யார் பாருங்க
சென்னை: பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றிருக்கிறது.. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு சொல்லி வருகிறார்கள்.
நம்முடைய நாட்டில், ஒவ்வொரு மதத்திலும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை போன்றவைகளில் பலவகையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.. ஆனால், இவை அனைத்திற்கும் பதிலாக, பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதக்களின் மீது விவாதங்களும் நடைபெற்றது.

இறுதியில், பொது சிவில் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டுவிட்டது.. அந்தவகையில், இந்தியாவிலேயே பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட முதல் மாநிலமாகியிருக்கிறது உத்தரகாண்ட்.
மறுமணம்: இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகள் அமலுக்கு வருகின்றன.. திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரி (அத்தை) யின் மகன் அல்லது மகள் மற்றும் தாய் சகோதரரின் (மாமா) மகன் அல்லது மகள் என்ற உறவுமுறையும் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், திருமணங்களை போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயமாகிறது... இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.. லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்ய தவறினால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 25,000 அபராதம் செலுத்த வேண்டும்..
மசோதா: மசோதாவில் பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுமணம், விவாகரத்து ஆகியவற்றுக்கு பொது விதிகளை யுசிசி மசோதா கொண்டுள்ளது... அதாவது, இந்த திருமண விதிகளின்படி, மணமகனுக்கு உயிருடன் இருக்கும் மனைவியோ அல்லது மணமகளுக்கு உயிருடனுள்ள கணவனோ இருக்கக்கூடாது.
ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதச் சடங்குகளின்படி திருமணம் செய்து கொள்ளலாம். எந்த சடங்காக இருந்தாலும் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த கல்யாணம் செல்லுபடியாகாது,
விவாகரத்து: விவாகரத்தை பொறுத்தவரை, கல்யாணமாகி ஒரு வருஷத்துக்குள்ளேயே விவாகரத்து கேட்கக்கூடாது. தம்பதியரின் திருமணம் மீறிய தொடர்பு, கொடூரமாக நடந்துகொள்ளுதல், திருமணத்துக்கு பிறகு குறைந்தது 2 வருடமாவது பிரிந்திருத்தல் உள்ளிட்ட காரணங்கள் விவாகரத்துக்கு ஏற்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
சுருக்கமாக சொல்லப்போனால், பெரும்பாலும் நடைமுறையில் உள்ள ஒரு திருமண பழக்கவழக்கத்துக்கெல்லாம், பொது சிவில் சட்டம் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.. இதெல்லாம்தான் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.. ஆனால், பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கார்த்தி சிதம்பரம்: அந்தவகையில், சிவகங்கை கார்த்தி சிதம்பரம் எம்.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. எக்ஸ் தளத்தில், "உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் "இந்துத்துவா" பரிசோதனை கூடமாக உத்தரகாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்திருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications