Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2000 ரூபாய் நோட்டுதான் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக "நிதியமைச்சர்" நிர்மலா இப்போதானே சொன்னார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ 500 நோட்டுகளை விட ரூ 2000 நோட்டுகள்தான் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே அண்மையில் கூறியிருக்கும் போது ரூ 2000 வாபஸ் குறித்து பேசிய பாஜக தலைவர்கள் அந்த நோட்டுகளின் புழக்கம் குறைந்ததாக கூறுவது முரண்பாடாக இருக்கிறது.

பாஜக தலைமையிலான அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2016 ஆம்ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி இரவு திடீரென பிரதமர் மோடி மக்கள் முன்பு உரையாற்றினார். அதில் இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்தார்.

Do you know What did Finance minister Nirmala Sitharaman said about Rs 2000?

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ 500, 1000 நோட்டுகளை வங்கியில் உரிய ஆவணங்களை காண்பித்து ஒப்படைத்து அதற்கு பதிலாக வேறு டினாமினேஷன் கொண்ட ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என கூறியிருந்தார்.

இதற்காக வங்கி வாசலில் மக்கள் கால்கடுக்க காத்திருந்தனர். மேலும் பலர் தங்கள் உயிரை கூட இழந்தனர். இந்த நிலையில் ரூ 2000, ரூ 200 உள்ளிட்ட நோட்டுகள் புதிதாக புழக்கத்தில் விடப்பட்டன. அது போல் புதிய ரூ 500 நோட்டுகளும் புழக்கத்தில் வந்தன. நவம்பர் 8 ஆம் தேதி, 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் மறந்திருக்காது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஏடிஎம்களில் கூட ரூ 500, ரூ 200, ரூ 100 நோட்டுகள்தான் பெரும்பாலும் வருகின்றன. வங்கிகளிலும் கூட குறைந்த அளவிலேயே ரூ 2000 நோட்டுகளின் பயன்பாடு இருக்கிறது. அப்படியென்றால் அச்சிடப்பட்ட புதிய ரூ 2000 நோட்டுகள் எங்கே போனது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. ரூ 2000 நோட்டுகளை அச்சிடும் பணியை மத்திய அரசு நிறுத்திவிட்டதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் சந்தோஷ்குமார் போன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வியை கடந்த மார்ச் மாதம் எழுப்பியிருந்தனர்.

Do you know What did Finance minister Nirmala Sitharaman said about Rs 2000?

அப்போது அதில் ரூ 2000நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுவிட்டதா, புழக்கத்தில் உள்ள ரூ 2000 நோட்டுகளை நிறுத்தும் திட்டம் உள்ளதா என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்திருந்த மத்திய நிதியமைச்சர் இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி புழக்கத்தில் உள்ள ரூ 2000 நோட்டுகளே போதுமானது என்பதால் 2019- 2020 ஆம்நிதியாண்டு முதலே நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாகவும் புதிய ரூ 2000 நோட்டுகளை அச்சிடக்கூடிய எந்த புதிய திட்டமும் இல்லை என்றும் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து மக்களவையில் நிர்மலா சீதாராமன் கூறுகையில் பணமதிப்பிழப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட ரூ 500 மற்றும் ரூ 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் 2017 மார்ச் முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 9.512 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ 500 நோட்டுகளும் 27.057 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளதார தெரிவித்துள்ளார்.

அதாவது நாட்டில் ரூ 500 நோட்டுகளை விட ரூ 2000தான் அதிகமாக புழக்கத்தில் உள்ளது என்றும் ஏடிஎம்களில் ரூ 2000 நோட்டுகளை நிரப்பாதது குறித்து வங்கிகளுக்கு மத்திய அரசு எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு ரூ 2000 நோட்டுகள் செல்லாது என்றும் வரும் 23 ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு ரூ 20000 மதிப்புள்ள 2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Do you know What did Finance minister Nirmala Sitharaman said about Rs 2000?

மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பிற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எதற்காக ரூ 2000 அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டு தற்போது வாபஸ் பெறப்படுகிறது, இதுவரை அடித்த ரூ 2000 நோட்டுகள் வீணா என்றெல்லாம் கேள்வி எழுந்த நிலையில் பாஜக மூத்த தலைவர்களோ ரூ 2000 நோட்டுகளின் புழக்கம் எப்போதோ குறைந்துவிட்டது என பதில் கொடுத்திருந்தனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ ரூ 2000 நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்ததாக கடந்த மாதம் மக்களவையில் கூறியிருந்த நிலையில் பாஜக தலைவர்களோ அவரது கருத்துக்கு முரணான ஒரு கருத்தை கூறியிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+