ஒரு பைசா வரல.. வராத முதலீட்டுக்கு விளம்பரம் வேறயா? அம்பலப்படுத்துவோம்.. கனிமொழிக்கு பாமக பாலு கேள்வி
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டுக்கு வந்து செயலாக்கம் பெற்ற தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்... இப்படி வராத முதலீட்டுக்கு வெற்று விளம்பரங்களை செய்து கொண்டிருந்தால், நாங்கள் அம்பலப்படுத்தி கொண்டே இருப்போம் என்று பாமக தெரிவித்திருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும்நிலையில், ஏற்கனவே 2 முறை வெளிநாட்டுப் பயணம் சென்ற முதல்வரால், தமிழகத்திற்கு என்னென்ன முதலீடுகள் வந்துள்ளது என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கனிமொழி: இந்நிலையில், சிவகங்கையில் கனிமொழியிடம் மேற்கண்ட கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "''சில பேர் நிறைய கனவுகளுடன், நடக்கவே முடியாத கனவுகளோடு இருப்பார்கள். அதனால் அந்த காழ்ப்புணர்வில் சில விமர்சனங்களை வைப்பார்கள். ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து தமிழகத்துக்கு பல முதலீடுகள் வந்தவண்ணம் உள்ளது எல்லாருக்குமே தெரியும்.
அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனங்களை சந்தித்து அவர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களும் தொழில் தொடங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்.. எனவே, இதுபோன்ற விமர்சனங்கள் என்பது, காழ்ப்புணர்வை தவிர வேறொன்றுமில்லை'' என்றார்.
கனிமொழியின் இந்த கருத்தினை மீண்டும் அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.. "தொழில் முதலீடு குவிந்திருந்தால் கனிமொழி புள்ளிவிவரங்களைக் கூறட்டும், பொய்பேச வேண்டாம்" என்று பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்திருப்பது பரபரப்பை உண்டு பண்ணி வருகிறது. இது தொடர்பாக சில கேள்விகளையும் எழுப்பியிருக்கும் பாலு, அதனை அறிக்கை வாயிலாக வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கை இதுதான்:
அன்புமணி : "வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்திருப்பதாக புள்ளிவிவரங்களுடன் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்க முடியாத திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி, காழ்ப்புணர்ச்சி காரணமாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவ்வாறு கூறியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அரசியல் சார்ந்த விமர்சனங்களை ஆதாரங்களுடன் எதிர்கொள்வதற்கு பதிலாக அவதூறு பேசும் கலாச்சாரத்திற்கு சகோதரி கனிமொழியும் அடிமையாகியிருப்பது வருத்தமளிக்கிறது. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டிய தேவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு இல்லை.
மத்திய அரசு: அதேநேரத்தில் தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்காமல், வெறும் ஒப்பந்தங்களை மட்டும் செய்து விட்டு முதலீடு குவிந்து விட்டதாக வெற்று விளம்பரங்களைச் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டால் அதை அம்பலப்படுத்த வேண்டிய கடமை ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அவருக்கு உண்டு. அதைத் தான் அவர் செய்து வருகிறார். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு இருப்பது கடமை உணர்ச்சி தான்.... காழ்ப்புணர்ச்சி இல்லை.
தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள். தொழில் தொடங்குவதற்கு உகந்த சீர்திருத்தங்களைச் செய்த மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை ஒரு சீர்திருத்தத்தைக் கூட செய்யவில்லை என்பதால் அந்தப் பட்டியலில் இல்லை. இதை கனிமொழி அவர்களால் மறுக்க முடியுமா? இதில் என்ன காழ்ப்புணர்ச்சி இருக்கிறது?
முதலீடு: தமிழ்நாட்டிற்கு கடந்த 3 மாதங்களில் வெறும் ரூ.8,325 கோடி மட்டும் தான் வெளிநாட்டு நேரடி முதலீடு வந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் தான் தமிழக அரசு உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.6.64 லட்சம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து விட்டதாக திமுக அரசு பெருமைப்பட்டுக் கொண்டது. உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் ரூ.8325 கோடி என்பது எத்தனை விழுக்காடு என்பதை திமுக பொதுச்செயலாளர் கனிமொழி கணக்கிட்டு , இது பெருமைப்படத்தக்கதா? என்று சொல்லட்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை ரூ. 10 லட்சம் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டதாக திமுக அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், கடந்த 39 மாதங்களில் வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு ரூ.68,145 கோடி மட்டும் தான். இத்துடன் இதில் பாதியளவுக்கு உள்நாட்டு முதலீடு கிடைத்ததாக வைத்துக் கொண்டாலும், தமிழகத்தின் மொத்த தொழில் முதலீட்டு வரவு ரூ. 1 லட்சம் கோடி என்ற அளவில் தான் இருக்கும். இது உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 10% மட்டும் தானே? இது பெருமைப்படத்தக்கதா?
எதிர்க்கட்சிகள்: துபாய்க்கும், ஸ்பெயினுக்கும் முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நாடுகளில் இருந்து ரூ.9540 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்காக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், அந்த நாடுகளில் இருந்து ஒரு பைசா முதலீடு கூட தமிழகத்துக்கு வரவில்லை. ஒருவேளை முதலீடு வந்திருந்தால் அதை வெளியிடுங்கள் என்று கேட்கிறோம். இதில் என்ன காழ்ப்புணர்ச்சி?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாகி விட்டால் ஒரு பேச்சு பேசுவது கனிமொழி அவர்களின் வழக்கம். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழ்நாட்டில் மது ஆறாக ஓடுவதாகவும், அதனால் ஏராளமான ஏழைப் பெண்கள் விதவைகள் ஆவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேடைக்கு மேடை முழங்கினார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை; மது வெள்ளமாக ஓடுகிறது; பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆகின்றனர்; ஆனால், அது குறித்த வினாக்களுக்கு விடையளிக்காமல் கனிமொழி தவிர்க்கிறார்.
வெள்ளை அறிக்கை: இப்போதும் சொல்கிறோம்.... திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டுக்கு வந்து செயலாக்கம் பெற்ற தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். பாராட்டத்தக்க அளவுக்கு முதலீடுகள் வந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை கிடைத்திருந்தால் பாராட்டுகிறோம். மாறாக, வராத முதலீட்டுக்கு வெற்று விளம்பரங்களை செய்து கொண்டிருந்தால் அதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கும்.
-
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்











Click it and Unblock the Notifications