லாட்ஜில் ரூம் போட்ட அண்ணன், தம்பி.. 3 நாளும் வெளியே வரல.. டக்னு கதவை திறந்தால்? ஆடிப்போன சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரியமேடு லாட்ஜில் தேர்வு எழுத வந்த 2 சகோதரர்கள் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த 29-ம் தேதி அறைக்குள் சென்றவர்கள், அதன் பிறகு வெளியே வரவேயில்லை.. 3 நாட்கள் கழித்து அந்த அறையை திறந்து பார்த்தபோதுதான், அண்ணன்-தம்பிகள் செய்த காரியம் அதிர்ச்சியை தந்துவிட்டது.

விருதுநகர் மாவட்டம் ரோஷப்பட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்த கார்த்திக் (28), வினோத் (21) ஆகிய 2 பேரும் அண்ணன்-தம்பிகள்.... கடந்த 29-ம் தேதி 2 பேருமே சென்னை வந்திருக்கிறார்கள்...

Chennai Lodge

சென்னை பெரியமேடு லாட்ஜ்

பெரியமேடு பகுதியில் ஒரு லாட்ஜூக்கு சென்று, தேர்வு எழுதுவதற்காக வந்திருப்பதாகவும், அதற்காக ரூம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள்.. லாட்ஜ் ஊழியர்களிடம் தங்களது அடையாள அட்டைகளையும் தந்து ரூம் எடுத்து தங்கியுள்ளனர்..

அதற்கு பிறகு 3 நாட்களாக அந்த ரூமை விட்டு, 2 பேரும் வெளியே வரவில்லை.. லாட்ஜ் ஊழியர்களும் இதை பெரிதாக கவனிக்கவில்லை., தேர்வு எழுத வந்திருப்பதால், அறையில் இருவரும் படித்து கொண்டிருப்பதாக நினைத்தார்கள்.. ஆனால் நேற்றிரவு அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது.

3 நாட்களும் வெளியே வரல

இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர் சுப்பிரமணி, ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்... உடனே பெரியமேடு போலீசார் லாட்ஜுக்கு வந்து அந்த அறைக்கு சென்றனர். கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, கார்த்திக்கும் வினோத்தும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து விசாரித்தபோது, அவர்கள் 2 பேரும் உடன்பிறந்த அண்ணன்-தம்பிகள் என்பது தெரியவந்தது. அதைவிட அதிர்ச்சியான விஷயம், அவர்களுடைய தாய் மலர்தேரவி சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டாராம்..

புதிய வீடு கட்டியதும் இப்படியா

அதாவது உமா மலர்தேவிக்கும், அவரது கணவர் ராஜுவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததால், கணவரை பிரிந்து மகன்களுடன் மலர்தேவி வசித்து வந்திருக்கிறார்.. சமீபத்தில் மகன்கள் இருவரும் கடன் வாங்கி ஒரு புதிய வீடும் கட்டியுள்ளனர். இந்த சூழலில்தான் மலர்தேவியும், 2 மகன்களும் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். இதில் உமா மலர்தேவி உயிரிழந்துவிட்டார். ஆனால் கார்த்திக்கும் வினோத்தும் உயிர் தப்பியிருக்கிறார்கள்.

தாயை இழந்த பிறகு 2 பேராலும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர முடியவில்லை. நண்பர்கள், உறவினர்களிடம் கூட தங்களுடைய தாயைப் பற்றியே அடிக்கடி பேசி வருத்தப்பட்டு வந்துள்ளனர்.. தாய் இல்லாத இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை என்ற மனநிலைக்கு இருவரும் சென்றதாக கூறப்படுகிறது.

தாய் ஏன் இறந்தார்?

இதன்பிறகுதான் கடந்த 29-ம் தேதி விருதுநகரில் இருந்து சென்னைக்கு வந்து லாட்ஜில் தங்கியிருக்கிறார்கள்.. துர்நாற்றம் வீசியிருக்கிறதென்றால், லாட்ஜில் ரூம் போட்டதுமே அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் முடிந்த பிறகு 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது..

ஏற்கனவே குடும்ப தகராறில் தாயை இழந்த அந்த குடும்பம், இப்போது ஒரே நேரத்தில் 2 மகன்களையும் இழந்திருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தாய் மலர்தேவி எதற்காக இறந்தார்? ஏன் இவர்கள் புதிய வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்கள்? கடன் வாங்கி வீடு கட்டியதால், அந்த கடன் தொல்லை காரணமாக இருக்குமோ? என்றெல்லாம் விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+