அன்று ஆளுநர் வெளியேறிய போது சீறிய பொன்முடி.. ஆனால் இன்று நடந்ததை கவனித்தீர்களா?
சென்னை: கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை வெளியே சென்ற போது, இழிவுபடுத்தியாக பாஜகவால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்ததால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை..
தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை தவிர்த்தார்.

இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் இடம் பெறாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.இதை கேட்ட ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதாவத சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போதே, சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி பாதியிலேயே வெளியேறியிருந்தார். இது அப்போத பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ஆளுநர் ரவி கடந்த ஆண்டு வெளிநடப்பு செய்த போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, ஆளுநரை நோக்கி ஆவேசமாக கையை அசைத்தபடி சொல்வது போன்ற வீடியோ பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பரவின.
இதனிடையே பொன்முடி, ஆளுநரை வெளியே போகக்சொன்னதாகவும், அவரை இழிவுபடுத்திவிட்டதாகவும் பாஜகவினர் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.

அவையில் சில நிமிடங்கள் பேசிய அவர், "சட்டப்பேரவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.வாழ்க தமிழ்நாடு.. வெல்க பாரதம்.. நன்றி," என்று ஆளுநர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆளுநர் ரவி, இன்று பாதியிலேயே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவையில் முழு உரையை சபாநாயகர் அப்பாவு தான் வாசித்தார். இந்த நிலையில் ஆளுநரின் தேசிய கீதம் குறித்த இந்த கருத்துக்கு விளக்கம் அளித்த தமிழக சபாநாயகர் அப்பாவு, " அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இருந்தவை தவிர ஆளுநரின் சொந்த கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆளுநரை வரவேற்று அழைத்து வரும் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதாவது ஆளுநர் சட்டப்பேரவைக்குள் நுழையும்போதே தேசிய கீதம் இசைத்துதான் வரவேற்றோம்.
தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சி என்றாலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் வாசிக்கப்படுவது மரபாகும். பேரவை விதிகளின்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அடுத்து ஆளுநர் உரை, இறுதியில் தான் தேசிய கீதம். சட்டமன்ற மாண்பை ஆளுநர் மதிக்கவில்லை. மரபை ஆளுநர் மீறியுள்ளார்.பல்வேறு மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதில்லை, ஆனால் தமிழ்நாடு அரசு ஆளுநரை மதித்து அழைத்து வருகிறது. தேசிய கீதம் இசைப்பது குறித்து கடந்தாண்டே எனக்கு ஆளுநர் கடிதம் எழுதி, அந்தப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது," இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை வெளியே சென்ற போது, இழிவுபடுத்தியாக பாஜகவால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன் முடி இன்றைய சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை . ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்துள்ள பொன்முடி, எம்எல்ஏ பதவியை இழந்த காரணத்தால் இன்று கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.. இதை வைத்து பாஜகவினர் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக பொன்முடி தனது பதவிகளை இழந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications