Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா சிதறுதே.. வளைக்கப்படும் வாக்குகள்.. மகளிர் சுயஉதவி குழுக்களை கையில் எடுத்த திமுக.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதையடுத்து, முக்கிய பொறுப்பு ஒன்று அவரிடம் தரப்பட்டுள்ளதாம். இதுகுறித்த தகவல்கள்தான் திமுக வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன.. உதயநிதியின் இந்த செயல்பாடுகள் மூலம், திமுகவுக்கான வாக்குகள் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களின் வாக்குகள்தான் அதிகமாக உள்ளன.. அதனால்தான், மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோர் பெண்களை கவரும் வகையிலான திட்டங்களையே அதிகம் கொண்டு வந்திருந்தனர்.. இதன்மூலம் வெற்றிகளையும் பெற்றனர். அதே பாணி ஃபார்முலாவைதான், தற்போது திமுக அரசும் கையில் எடுத்து வருகிறது.

stalin udayanidhi

எனவே, மகளிர் ஓட்டுகளை கவரும் வகையில், திமுக அரசு பொறுப்பேற்றதும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடியல் பயணம் என்ற பெயரில், மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.. அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

உரிமைத்தொகை: இதில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருவது, 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகையாகும்.. தமிழகத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, "தகுதி வாய்ந்த" ஒரு கோடி பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் திமுக அரசு அறிவித்திருந்தது.. அதன்படி ஒரு கோடியே 67 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உரிமைத்தொகை பெற்றனர்.

பிறகு, கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.. இதைத்தவிர, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்காகவும், விரிவுபடுத்தபட்டு, அதற்கான ஆணையும் வெளியானது.. எனினும், உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து தகுதிகள் இருந்தும் ரூ.1000 கிடைக்கவில்லை என்று பல பெண்கள் புகார்களை தெரிவிக்க துவங்கினர்.

உதவித்தொகை: அந்த சமயத்தில், உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.. பணம் கொடுக்கப்படாமல் போன மற்றவர்களுக்கும், விரைவில் உதவித்தொகை வழங்கப்பட்டுவிடும். எப்படி பார்த்தாலும், தேர்தல் முடிந்ததும் பணம் தந்துவிடுவோம் என்பதால், கவலை வேண்டாம்" என்று உறுதி தந்திருந்தார்..

அத்துடன் தன்னுடைய அனைத்து லோக்சபா தேர்தல் பிரச்சாரங்களிலும், கோடி 63 லட்சம் பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை தேர்தலுக்கு பிறகு வழங்கப்படும் என்று உதயநிதி வாக்குறுதி தந்திருந்தார். அதன்படியே, தற்போது உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த அதிரடியை உதயநிதி தரப்பு முன்னெடுப்பதாக தகவல்கள் வருகின்றன.

வாழ்வாதாரம்: அதன்படி, துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் வகையில், மாநிலம் முழுதும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறதாம்..

ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 4.73 லட்சம் சுயஉதவி குழுக்கள் நம்முடைய தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.. எனவே, சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. இதனால், விடுபட்டவர்களையும் வளைக்க முடியும் என்று திமுக நம்புகிறது.

இந்த முறை திமுக ஆட்சியில் 90 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சி காலம் முடிவதற்குள், மேலும் 90 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக, மாவட்ட வாரியாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய, தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கடனுதவி திட்டம்: இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ள போகிறாராம்.. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவியும் வழங்க போகிறாராம்... இந்த அசைன்மென்ட்டை உதயநிதிக்கு தந்திருப்பதே முதல்வர் ஸ்டாலின்தான் என்கிறார்கள்.. எனவே, முதல்வரின் அறிவுரைப்படி, மாவட்ட வாரியாக உதயநிதியின் சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது..

இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் உட்பட, திமுகவின் அபார வெற்றிக்கு காரணமாக அமைந்தது, மகளிர் உரிமைத்தொகைதான் என்று கூறியிருந்தார்கள் அரசியல் விமர்சகர்கள்...

டபுள் பலன்கள்: எனவேதான், சுயஉதயவிக் குழுக்கள் மூலம் கடனுதவி தரும்பட்சத்தில், பெண்களின் வாக்குகள் திமுகவுக்கு அபரிமிதமாக திரும்பும் என்று நம்பப்படுகிறதாம்.. உதயநிதிக்கான கிரேஸும், தமிழக பெண்களின் மத்தியில் மேலும் உயரும் என்று கணிக்கப்படுகிறது.. திமுகவின் இந்த வியூகத்தை அதிமுகவும் உற்று கவனிக்க துவங்கியிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+