ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி.. மாதம், 2,000 டன்?.. "இவங்களுக்கு" முன்னுரிமை.. தமிழக அரசின் மாஸ்
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதில், நுகர்பொருள் வாணிப கழகம் தீவிர நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை, பெண்கள், குழந்தைகள் மத்தியில் பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது.. இப்படி உடலில் வைட்டமின் பற்றாக்குறை, இரும்புச்சத்து குறைபாடு போன்றவை காரணமாகவே, செயற்கை ஊட்டமேற்றிய உணவில் தீவிரம் காட்டி வருகிறது மத்திய அரசு.

சவால்: இந்த சவாலை எதிர்கொள்ள, செறிவூட்டப்பட்ட அரிசியையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வழக்கமான அரிசியில் இந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன.
அந்தவகையில், மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், தானியங்களில் இரும்புச்சத்தை செறிவூட்டுவது உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பைக் கணிசமாக அதிகரிக்க செய்யும் என்றும், ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தாது, குடலில் நல்ல நுண்ணுயிரிகளை அழித்து பாக்டீரிய தொற்று ஏற்படலாம், உடலில் இரும்புச்சத்து அதிகரித்தால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படலாம், உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம் என்றெல்லாம் தகவல்கள் கசிந்தன.
ரேஷனில் அரிசி: ஆனால், செறிவூட்டப்பட்ட அரிசி என்பது, அரிசியை மாவாக அரைத்து, இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் B 12 போன்ற சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன.. பிறகு, அரிசி வடிவில் மாற்றப்பட்டு, 100 கிலோவுக்கு, 1 கிலோ என்ற விகிதத்தில் புழுங்கல், பச்சரிசியுடன் கலந்து வழங்கப்படுகிறது..
அந்தவகையில், மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழக ரேஷன் கடைகளில், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு, இதுகுறித்த ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
உடல்நலக்குறைபாடு: அதில், "இந்த அரிசியை, தலசீமியா எனப்படும், மரபணு சார்ந்த ரத்த சோகை போன்ற உடல் நல குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது" என்ற விழிப்புணர்வு வாசகத்தை, அந்த அரிசி உள்ள சாக்கு பையில் அச்சிடுமாறு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, இந்திய உணவு கழகம் உத்தரவிட்டிருந்தது..
இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டு, கடந்த வருடம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. தற்போது இதற்காக மாதம், 2,000 டன் என வருடத்துக்கு 24,000 டன் ஊட்டச்சத்து கலவை தயாரிக்கும் பணியில் நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications